jio-vs-airtel-vs-bsnl
டெலிகாம் நிறுவனங்களான Airtel, Jio மற்றும் BSNL ஒன்றுடு ஒன்று போட்டி கொண்டு அதன் ரூ,400க்குள் வரும் திட்டத்தில் பல நன்மை வழங்குகிறது அதாவது இந்த திட்டங்களில் அன்லிமிடெட் காலிங்,அன்லிமிடெட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5G நன்மை வழங்குகிறது இதனுடன் இதில் மேலும் பல ஜாக் பாட் நன்மைகள் வழங்கப்படுகிறது அதில் ஜியோவில் அன்னிவர்சரி எர்டெலில் கூடுதலாக டேட்டா மற்றும் bsnl அதிக வேலிடிட்டி போன்ற பல நன்மை வளங்குகிரக்து இந்த மூன்றயும் ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.
பாரதி ஏர்டெல்லின் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 2 ஜிபி தினசரி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டத்தில் கஸ்டமருக்கு அன்லிமிடெட் 5G வழங்குகிறது. இதனுடன், 30 ஜிபி கூகிள் கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளது. ஆனால் அதுமட்டுமல்ல. இந்த திட்டத்துடன் கஸ்டமர்கள் ஆப்பிள் மியூசிக் இலவச சந்தா அக்சஸ் வழங்குகிறது . பின்னர், பெர்ப்ளெக்ஸிட்டி உடனான கூட்டாண்மை காரணமாக, ரூ.379 திட்டத்தில் ஏர்டெல் கஸ்டமர்கள் பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ AI சப்ச்க்ரிப்சன் நன்மை பெறலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சேவை வேலிடிட்டி முழுசா ஒரு மாதம் ஆகும்.
அதாவது நீங்கள் இந்த திட்டத்தை எந்த நாளில் ரீசார்ஜ் செய்கிரிகளோ அதே தேதியில் தான் ரீசார்ஜ் அடுத்த மாதம் ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும்.
இதையும் படிங்க:BSNL யின் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்ய இன்றே கடைசி நாள் இனி கம்மி விலையில் அதிக நன்மை கிடைக்காது
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் சேவை வேலிடிட்டி வழங்குகிறது. இதை தவிர கஸ்டமர்கள் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5 ஜி டேட்டாவையும் வழங்குகிறது. இந்த திட்டத்துடன் ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. இதனுடன், ஜியோ இந்த திட்டத்துடன் ஜியோ அன்லிமிடெட் சலுகையையும் வழங்குகிறது.
இந்த நிலையில், ஜியோ இந்த திட்டத்துடன் ஆண்டுவிழா சலுகையை வழங்குகிறது. இந்த சலுகையில் ஜியோஃபைனான்ஸுடன் 2% கூடுதல் தங்கம், ஜியோஹோம் 2 மாத இலவச இணைப்பு, ஜியோஹாட்ஸ்டார் மொபைல்/டிவி சந்தா, ரிலையன்ஸ் டிஜிட்டலில் ரூ.399 தள்ளுபடி, குறைந்தபட்சம் ரூ.1,000 ஆர்டருக்கு ரூ.200 தள்ளுபடி, மூன்று மாத ஜொமாட்டோ கோல்ட், ஒரு மாத ஜியோசாவன், நெட்மெட்ஸ் ஆறு மாத சந்தா, EaseMyTrip உள்நாட்டு (Domestic)விமானங்களில் ரூ.2,220 தள்ளுபடி மற்றும் ஹோட்டல்களில் 15% தள்ளுபடி மற்றும் ஜியோஏஐகிளவுட் இலவச 50 ஜிபி ஸ்டோரேஜ் ஆகியவை அடங்கும்.
இந்த திட்டம் குறித்த தகவல்களை BSNL தனது X அக்கவுண்ட்ல் வெளியிட்டுள்ளது. இந்த 50 நாள் திட்டத்தில், பயனர்கள் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் காலிங் மற்றும் தினமும் 100 இலவச SMS நன்மை பெறலாம் என்று நிறுவனம் தனது பதிவில் தெரிவித்துள்ளது. இதனுடன், கஸ்டமர்களுக்கு தினமும் 2GB டேட்டாவையும் பெறுவார்கள். இந்த திட்டத்தின் விலையை நிறுவனம் வெறும் 347 ரூபாயாக வைத்துள்ளது. அதாவது, 400 ரூபாய்க்கும் குறைவாக, 50 நாட்கள் வேலிடிட்டி இதுபோன்ற சூழ்நிலையில், இந்த திட்டம், கஸ்டமர்கள் சுமார் 2 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை.