BSNL ஒரு முறை ரீச்சார்ஜ் பல நாள் நோ டென்ஷன் 6-1 வருடம் வேலிடிட்டி பெஸ்ட் திட்டம்

Updated on 30-Jul-2025

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL(பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்) அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தின் விலை ரூ,897 ஆகும் இதை ரீசார்ஜ் செய்தால் நீங்கள் ஒரு பாடி வருசத்துக்கு ரீச்சார்ஜ் செய்யும் தொல்லை இருக்காது மேலும் இந்த திட்டத்தில் இருக்கும் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க இதை தவிர 1 வருஷம் டென்ஷன் நோ திட்டத்தையும் பார்க்கலாம்.

BSNL ரூ,897 திட்டத்தின் நன்மை

பிஎஸ்என்எல் யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது இது ரூ,897 யில் வருகிறது, இந்த திட்டத்தில் வரும் நன்மையை பற்றி பேசுகையில் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,90GB ஹை ஸ்பீட் டேட்டா மற்றும் தினமும் 100SMS வழங்குகிறது இதனுடன் இதன் வேலிடிட்டி 180 நாட்களுக்கு வழங்குகிறது அதாவது சுமார் 6 மாதங்களுக்கு இந்த நன்மையை பெறலாம் இந்த திட்டத்தின் மூலம் எந்த நெட்வர்க்கில் இருந்தும் எளிதாக பேச முடியும் அதாவது இது அனைத்து நெட்வர்க்கில் பொருந்தும் .

BSNL-ரூ.1198 திட்டம்

இந்த சிக்கனமான BSNL திட்டத்தின் விலை ரூ.1,198 ஆகும், இது கஸ்டமர்களுக்கு முழு 365 நாட்களையும் வேலிடிட்டி வழங்குகிறது , இது ரூ.3.28 தினசரி செலவாகும். நன்மைகளைப் பொறுத்தவரை, இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 300 நிமிட வொயிஸ் கால்கள் அடங்கும், இது கஸ்டமர்கள் இந்தியா முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்குடனும் இணைக்க அனுமதிக்கிறது. கூடுதலாக, கஸ்டமர்கள் ஒவ்வொரு மாதமும் 3GB டேட்டா மற்றும் 30 இலவச SMSகளைப் வழங்குகிறது . இந்தத் திட்டத்தின் மற்றொரு கவர்ச்சிகரமான அம்சம் இலவச தேசிய ரோமிங்கைச் சேர்ப்பதாகும்.

இதையும் படிங்க:Jio மாஸ் தினமும் அன்லிமிடெட் காலிங், 3GB டேட்டா திட்டத்தால் மணி கணக்கா பேசிட்டே இருக்கலாம்

BSNL- ரூ.2,399 திட்டம்

BSNL நிறுவனம் 425 நாள் திட்டத்தையும் வழங்குகிறது, இது பயனர்களுக்கு கூடுதலாக 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தின் விலை ரூ.2,399 விலையில் கிடைக்கும் இந்த ப்ரீபெய்ட் ஆப்ஷன் அன்லிமிடெட் வொயிஸ் கால்களுடன் வருகிறது. பயனர்கள் தினமும் 2GB டேட்டா உட்பட 850GB அதிவேக டேட்டாவையும், 100 இலவச SMS-களையும் வழங்குகிறது . இலவச தேசிய ரோமிங்கும் இந்த தாராளமான திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :