Vivo Y400 5G vs Poco X7 Pro 5G: இந்த இரு போனில் எது பெஸ்ட்

Updated on 06-Aug-2025

Vivo சமிபத்தில் அதன் Vivo Y400 5G போனை அறிமுகம் செய்தது மேலும் இந்த போன் ஒரு 22000ரூபாய் பட்ஜெட்டில் அறிமுகம் செய்தது, இதற்க்கு டப் கொடுக்கும் வகையில் Poco X7 Pro 5G போனின் டிசைன்,டிஸ்ப்ளே கேமரா மற்றும் பேட்டரி போற்றவை ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் மேலும் இதன் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

Vivo Y400 5G vs Poco X7 Pro 5G விலை தகவல்.

  • இந்தியாவில் 8 ஜிபி ரேம் கொண்ட Vivo Y400 5G போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 128 ஜிபி ஸ்டோரேஜை ரூ.21,999க்கும், 256 ஜிபி மெமரியுடன் ரூ.23,999க்கும் வாங்கலாம்.
  • அதுவே Poco X7 Pro 5G யின் 8GB/256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ,22,899 ஆக இருக்கிறது.

Vivo Y400 5G vs Poco X7 Pro 5G : டிஸ்ப்ளே

  • Vivo Y400 5G போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.67″ FHD+ AMOLED டிஸ்ப்ளே உடன் 2400 × 1080 பிக்சல் ரெசளுசன் வழங்குகிறது, இதனுடன் இதில் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1200nits ப்ரைட்னஸ் சப்போர்ட் வழங்குகிறது.
  • அதுவே Poco X7 Pro 5G போனில் அதே 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 2712 x 1220பிக்சல் ரேசளுசன் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் இதில் 3,200 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது.

Vivo Y400 5G vs Poco X7 Pro 5G:ப்ரோசெசர்

  • Vivo Y400 5G போனின் Qualcomm Snapdragon 4 Gen 2 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இதனுடன் இது Funtouch OS 15 அடிபடையின் கீழ் ஆண்ட்ரோய்ட் 15 கீழ் இயங்குகிறது.
  • அதுவே இதன் மறுபக்கம் Poco X7 Pro 5G போனில் MediaTek Dimasity 8400 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மற்றும் Poco X7 Pro 5G யின் ஒப்பரேட்டிங் சிஸ்டம் HyperOS 2.0 அடிபடையின் கீழ் ஆண்ட்ரோய்ட் 15 யில் வேலை செய்கிறது.

இதையும் படிங்க:Realme 15 5G vs OnePlus Nord CE 5 5G வேற லெவல் மாஸ் கட்டும் இந்த இரு போனில் இருக்கும் வித்தியாசம் என்ன

Vivo Y400 5G vs Poco X7 Pro 5G: கேமரா

  • Vivo Y400 5G போனில் பின்புறத்தில் டுயல் கேமரா செட்டப் கொண்டுள்ளது அதில் 50MP+2MP பின் கேமரா வழங்கப்படுகிறது மற்றும் இதில் செல்பிக்கு 32MP கேமரா வழங்குகிறது.
  • அதுவே Poco X7 Pro 5G போனில் OIS மற்றும் EIS சப்போர்டுடன் 50 மெகாபிக்சல் Sony LYT-600 கேமரா மற்றும் 8 மெகபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்படுகிறது மற்றும் இதன் கீழ் செல்பி மற்றும் வீடியோ காலிங்க்கு முன் பக்கத்தில் 20 மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்படுகிறது.

Vivo Y400 5G vs Poco X7 Pro 5G: பேட்டரி

  • Vivo Y400 5G போனில் 6000mAh பேட்டரியுடன் 90W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.
  • Poco X7 Pro 5G போனில் 6,000 mAhஉடன் இதில் 90W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :