Tecno Pova Slim 5G vs Samsung Galaxy A17 5G
Tecno சமிபத்தில் அதன் Tecno Pova Slim 5G போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதற்க்கு சரியான வகையில் எந்த போன் இருக்கும் என பார்த்த பொது இதுக்கு சரியான போட்டியாக Samsung Galaxy A17 5G போன் இருந்தது இதன் டிஸ்ப்ளே, ப்ரோசெசர், கேமரா மற்றும் பேட்டரி போன்றவற்றை ஒப்பிட்டு இது எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.
Tecno Pova Slim 5G ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, அதன் ரெசளுசன்1224×2720 பிக்சல்கள் மற்றும் 144Hz ரெப்ரஸ் ரேட் அதே நேரத்தில், Samsung Galaxy A17 5G ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் முழு HD + Infinity U சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, இது 1080×2340 பிக்சல்கள் ரெசளுசன்1224கொண்டுள்ளது , இது 90Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது.
டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 செயலியுடன் பொருத்தப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1330 செயலியுடன் பொருத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஐக்யூஓஓ இசட்10ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 4என்எம் செயலியுடன் பொருத்தப்பட்டுள்ளது.
டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான HiOS 15 உடன் வருகிறது. சாம்சங் கேலக்ஸி A17 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான One UI 7 உடன் இயங்குகிறது,
டெக்னோ போவா ஸ்லிம் 5G ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் முதன்மை AI கேமரா உள்ளது. அதே நேரத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு 13 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. Samsung Galaxy A17 5G ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் f/1.8 அப்ரட்ஜர் மற்றும் ஆட்டோஃபோகஸ் கொண்ட 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவும், f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவும் உள்ளன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு f/2.0 துளை கொண்ட 13 மெகாபிக்சல் முன் கேமராவுடன் வருகிறது.
இதையும் படிங்க:Vivo T4 Pro vs Realme P4 Pro 5G: இந்த இரு லேட்டஸ்ட் புதிய போனில் இருக்கும் வித்தியாசத்தை பாத்தால் அசந்து போவிங்க
Tecno Pova Slim 5G யில் இரட்டை சிம், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், 4ஜி, 5ஜி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜியில் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 5, ப்ளூடூத் 5.3 மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவை உள்ளன. அதே நேரத்தில்,
டெக்னோ போவா ஸ்லிம் 5G 5,160mAh பேட்டரியுடன் வருகிறது, இது 45W வேகமான சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. Samsung Galaxy A17 5G 5,000mAh பேட்டரியுடன் 25W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது .
Tecno Pova Slim 5G யின் 8GB+ 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 19,999 ரூபாயில் அறிமுகம் செய்யப்பட்டது, அதுவே Samsung Galaxy A17 5G யின் 6GB+128G ஸ்டோரேஜ் வேரியன்ட் 18,999 ரூபாய் மரற்றும்8GB+128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் 20,499ரூபாய்க்கும் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது.