Samsung Galaxy F70e 5G vs Realme P4x 5G
சாம்சங் சமிபத்தில் Samsung Galaxy F70e 5G-ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போனுக்கு சரியான ஈடுகொடுக்கும் வகையில் எந்த போன் இருக்கிறது என பார்க்கும்போது .Realme P4x 5G போனை கொண்டு வந்துள்ளோம் இந்த இரு போன்களில் இருக்கும் டிஸ்ப்ளே,ப்ரோசெசர், கேமரா மற்றும் பேட்டரி விலை போன்றவற்றை ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் Samsung Galaxy F70e 5G-ல் MediaTek Dimensity 6300 செயலி பொருத்தப்பட்டுள்ளது. Realme P4x 5G-ல் MediaTek Dimensity 7400 Ultra 5G என்பதை பார்க்கலாம் வாங்க.
Samsung Galaxy F70e 5G ஸ்மார்ட்போன் 4GB/128GB ஸ்டோரேஜ் வகை ₹12,999 விலையிலும், 6GB/128GB ஸ்டோரேஜ் வகை ₹14,999 விலையிலும் கிடைக்கிறது. Realme P4x 5G ஸ்மார்ட்போன் 6GB/128GB ஸ்டோரேஜ் வகை ₹15,499 விலையிலும், 8GB/128GB ஸ்டோரேஜ் வகை ₹16,999 விலையிலும், 8GB/256GB ஸ்டோரேஜ் வகை ₹17,999 விலையிலும் கிடைக்கிறது.
Samsung Galaxy F70e 5G, 720×1600 பிக்சல்கள், 120Hz ரெப்ரஸ் ரேட் , 260 ppi பிக்சல் டென்சிட்டி மற்றும் 800 nits வரை ஹை ப்ரைட்னஸ் உடன் கூடிய 6.7-இன்ச் HD+ LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. Realme P4x 5G, 1080×2400 பிக்சல்கள், 1000 nits அதிகபட்ச ப்ரைட்னஸ் மற்றும் 144Hz ரெப்ரஸ் ரெட்டுடன் வருகிறது கூடிய 6.72-இன்ச் FHD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
Samsung Galaxy F70e 5G ஆனது MediaTek Dimensity 6300 சிப்செட்டால் இயக்கப்படுகிறது, அதே நேரத்தில் Realme P4x 5G ஆனது MediaTek Dimensity 7400 Ultra 5G செயலியால் இயக்கப்படுகிறது.
Samsung Galaxy F70e 5G ஆனது Android 16 ஐ அடிப்படையாகக் கொண்ட One UI 8 இல் இயங்குகிறது. Realme P4x 5G ஆனது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட Realme UI 6.0 இல் இயங்குகிறது.
Samsung Galaxy F70e 5G ஸ்மார்ட்போனில் f/1.8 அப்ரட்ஜர் கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவும், f/2.4 அப்ரட்ஜர் கொண்ட 2-மெகாபிக்சல் ஆழ கேமராவும் பின்புறத்தில் உள்ளன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக f/2.0 அப்ரட்ஜர் கொண்ட 8-மெகாபிக்சல் முன் கேமராவும் Realme P4x 5G ஸ்மார்ட்போனில் 50-மெகாபிக்சல் பரிமாறு AI கேமராவும், பின்புறத்தில் 2-மெகாபிக்சல் செகண்டரி கேமராவும் உள்ளன. செல்ஃபிகளுக்காக 8-மெகாபிக்சல் முன் கேமராவும் உள்ளது.
இதையும் படிங்க: Nothing யின் இந்த மாடலில் பக்கவான ஆபர் கம்மி விலையில் தட்டி தூக்க சரியான நேரம்
சாம்சங் கேலக்ஸி F70e 5G, 25W பாச்ட சார்ஜிங்கிற்கான 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. Realme P4x 5G, 45W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் 7,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
Samsung Galaxy F70e 5G-யில் டூயல் சிம், 3.5mm ஜாக், 5G, Wi-Fi, Bluetooth 5.3, GPS, மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை உள்ளன. Realme P4x 5G-யில் 5G, Wi-Fi 6, Bluetooth 5.4, GPS, மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை உள்ளன.