Realme சமீபத்தில் அதன் புதிய ஸ்மார்ட்போனான Realme Narzo 90 5G ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது , இது Moto G67 Power 5G மற்றும் Realme Narzo 90 5G போனை டிஸ்ப்ளே, கேமரா,ப்ரோசெசர் மற்றும் பேட்டரி பேக்கப் போன்றவற்றை ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.
Realme Narzo 90 5G ஸ்மார்ட்போன் 6GB+128GB ஸ்டோரேஜ் வகை ₹16,999 விலையிலும், 8GB+128GB ஸ்டோரேஜ் வகை ₹18,499 விலையிலும் கிடைக்கிறது. Moto G67 Power 5G ஸ்மார்ட்போன் 8GB+128GB ஸ்டோரேஜ் வகை ₹15,999 விலையிலும் கிடைக்கிறது.
Realme Narzo 90 5G ஆனது 1080×2372 பிக்சல்கள் ரெசளுசன், 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 240Hz டச் ரெப்ரஸ் ரேட் மற்றும் 1,400 nits ஹை ப்ரைட்னஸ் மற்றும் 397ppi பிக்சல் டென்சிட்டி வழங்குகிறது கொண்ட 6.57-இன்ச் AMOLED முழு HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. Moto G67 Power 5G ஆனது 1080×2400 பிக்சல்கள் ரெசளுசன், 120Hz ரெப்ரஸ் ரேட் , 391ppi பிக்சல் டென்சிட்டி மற்றும் 20:9 ரெப்ரஸ்ரேட் 6.7-இன்ச் முழு HD+ LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
Realme Narzo 90 5G ஆனது octa-core 6nm MediaTek Dimensity 6400 Max சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, அதே நேரத்தில் Moto G67 Power 5G ஆனது Qualcomm Snapdragon 7s Gen 2 செயலி மூலம் இயக்கப்படுகிறது.
Realme Narzo 90 5G ஆனது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட Realme UI 6.0 இல் இயங்குகிறது. Moto G67 Power 5G ஆனது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட Hello UX உடன் வருகிறது.
Realme Narzo 90 5G ஸ்மார்ட்போனில் f/1.8 அப்ரட்ஜர் கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவும், பின்புறத்தில் f/2.4 அப்ரட்ஜர் கொண்ட 2-மெகாபிக்சல் மேக்ரோ கேமராவும் உள்ளன. Narzo 90 5G ஸ்மார்ட்போனில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்க்க 50-மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. Moto G67 Power 5G ஸ்மார்ட்போனில் f/1.8 அப்ரட்ஜர் கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவும், f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமராவும், பின்புறத்தில் டூ-இன்-ஒன் ஃப்ளிக்கர் கேமராவும் உள்ளன.
இதையும் படிங்க Realme Narzo 90x 5G vs Poco C85 5G: லேட்டஸ்ட் அறிமுகமான ஒரே விலை ரேஞ்சில் இருக்கும் இந்த போனில் எது பெஸ்ட்
ரியல்மி நார்சோ 90 5ஜி ஸ்மார்ட்போன் 60W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் 7,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மோட்டோ G67 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் 30W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் 7,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
Realme Narzo 90 5G-யில் 5G, Bluetooth 5.3, Wi-Fi 5, GPS மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும். Moto G67 Power 5G-யில் 5G, dual-band Wi-Fi, Bluetooth 5.1, GPS, GLONASS, Galileo, QZSS மற்றும் BeiDou ஆகியவை அடங்கும்.