Realme 15 5G vs OnePlus Nord CE 5 5G வேற லெவல் மாஸ் கட்டும் இந்த இரு போனில் இருக்கும் வித்தியாசம் என்ன

Updated on 25-Jul-2025

Realme நேற்று இந்தியாவில் அதன் Realme 15 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது, Realme 15 5G இந்த ஆண்டு பல சுவரஸ்யமான வழங்குகிறது, மேலும் இந்த போனுக்கு சரியான போட்டியை தரும் போன் OnePlus Nord CE 5 5G களத்தில் இறக்கப்பட்டுள்ளது டிஸ்ப்ளே, கேமரா,ப்ரோசெசர் மற்றும் பேட்டரி போன்றவற்றை ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்

Realme 15 5G vs OnePlus Nord CE 5 5G: டிஸ்ப்ளே

  • Realme 15 5G ஆனது 6.8-இன்ச் முழு HD+ கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளேவை 2800×1280 பிக்சல்கள் ரெசளுசன், 144Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 6500 nits ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது.
  • OnePlus Nord CE 5 5G ஆனது 2392×1080 பிக்சல்கள் ரெசளுசன், 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 300Hz டச் வேரியன்ட் வீதத்துடன் 6.77-இன்ச் OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

Realme 15 5G vs OnePlus Nord CE 5 5G: ப்ரோசெசர்

  • Realme 15 5G ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 7300 Energy 5G 4nm ப்ரோசெசர் வழங்கப்படுகிறது
  • OnePlus Nord CE 5 5G போனின் பற்றி MediaTek Dimensity 8350 4nm ப்ரோசெசர் வழங்குகிறது.

Realme 15 5G vs OnePlus Nord CE 5 5G:-ஒப்பரேட்டிங் சிஸ்டம்

  • Realme 15 5G ஆண்ட்ரோய்ட் 15 அடிபடையின் கீழ் Realme UI 6.0 யில் வேலை செய்கிறது,
  • அதுவே இதன் மறுபக்கம் OnePlus Nord CE 5 5G ஆண்ட்ரோய்ட் 15 அடிபடையின் கீழ் OxygenOS 15 யில் வேலை செய்கிறது.

இதையும் படிங்க:Vivo X200 FE vs Oppo Reno 14 Pro 5G: இந்த இரு புதிய டிவியில் எது பெஸ்ட்

Realme 15 5G vs OnePlus Nord CE 5 5G:- கேமரா செட்டப்

  • Realme 15 5G இன் பின்புறம் OIS சப்போர்டுடன் 50-மெகாபிக்சல் Sony IMX882 ப்ரைமரி கேமரா மற்றும் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸுடன் 8-மெகாபிக்சல் கேமரா உள்ளது. அதே நேரத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக f/2.4 துளையுடன் கூடிய 50-மெகாபிக்சல் முன்பக்கம் உள்ளது.
  • OnePlus Nord CE 5 5G இன் பின்புறம் OIS சப்போர்டுடன் 50-மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா. 16-மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.

Realme 15 5G vs OnePlus Nord CE 5 5G:- பேட்டரி

  • Realme 15 5G யில் 7000mAh பேட்டரியுடன் 80W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது
  • இதன் மறுபக்கம் OnePlus Nord CE 5 5G போனில் 7,100mAhபேட்டரி உடன் 80W SuperVOOCபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது.

Realme 15 5G vs OnePlus Nord CE 5 5G:- விலை தகவல்.

  • Realme 15 5G-யின் விலையைப் பற்றிப் பேசுகையில், அதன் அடிப்படை வேரியண்டில் 8GB RAM உடன் 128GB ஸ்டோரேஜ் உள்ளது. இதன் விலை ரூ.25,999. 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.27,999 ஆக உள்ளது. டாப் வேரியண்டில் 12GB RAM உடன் 256GB ஸ்டோரேஜ் உள்ளது. இதன் விலை ரூ.30,999. இதற்கு ரூ.2 ஆயிரம் வரை பேங்க் சலுகையையும் நிறுவனம் வழங்குகிறது.
  • அதுவே OnePlus Nord CE 5 5G போனின் விலையை பற்றி பேசினால் 8GB RAM+128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூ,24,999 மற்றும் அதன் 8GB RAM+256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ,26,999 ஆகும்
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :