Oppo சந்தையில் அதன் Oppo Find N5 அறிமுகம் செய்தது, மேலும் Oppo Find N5 உடன் மோதும் விதமாக ப்ளாக்ஷிப் போல்டபில் போன் Xiaomi Mix Fold 4 போனை களத்தில் இறக்கியுள்ளது, மேலும் இந்த இரு போனின் டிஸ்ப்ளே, கேமரா, ப்ரோசெசர் மற்றும் பேட்டரி போன்றவற்றை ஒப்பிட்டு இந்த இரு போனில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க
Xiaomi Mix Fold 4 ஆனது 7.98-இன்ச் பிரைமரி 2K AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 2,224×2,488 பிக்சல்கள் தீர்மானம், 3000 nits பிரகாசம் மற்றும் 120hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. மறுபுறம், Oppo Find N5, 2480 x 2248 பிக்சல்கள் தீர்மானம், 412ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 8.12-இன்ச் LTPO AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. 2616 x 1140 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.62-இன்ச் 2K AMOLED டிஸ்ப்ளே உள்ளது.
Xiaomi Mix Fold 4 ஆனது ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 ப்ரோசெசர் கொண்டுள்ளது. Oppo Find N5-ல் Snapdragon 8 Elite ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது.
Xiaomi Mix Fold 4 ஆனது Android 14 ஐ அடிப்படையாகக் கொண்ட HyperOS யில் இயங்குகிறது. அதே நேரத்தில், Oppo Find N5 ஆனது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட ColorOS 15 யில் இயங்குகிறது.
Xiaomi Mix Fold 4 ஆனது 16GB வரை LPDDR5X ரேம் மற்றும் 512GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. Oppo Find N5 16GB RAM மற்றும் 512GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.
Xiaomi Mix Fold 4 யின் பின்புறம் OIS சப்போர்டுடன் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 10-மெகாபிக்சல் மூன்றாவது கேமரா மற்றும் 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 20 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. Oppo Find N5-ன் பின்புறம் F/1.8 அப்ரட்ஜர் மற்றும் OIS சப்போர்டுடன் கூடிய 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, F/2.7 அப்ரட்ஜர், OIS சப்போர்ட் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 50-மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.
Xiaomi Mix Fold 4 ஆனது 5,100mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 67W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. Oppo Find N5 ஆனது 80W சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,600mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
Xiaomi Mix Fold 4 யில் உள்ள கனெக்சன் விருப்பங்களில் 5G சப்போர்ட் , Wi-Fi 7, Bluetooth 5.4, NFC மற்றும் GPS ஆகியவை அடங்கும். Oppo Find N5 யில் 3.5mm jack, 4G LTE, Wi-Fi 7, Bluetooth 5.3, GPS, GLONASS (G1), NFC மற்றும் USB Type C port ஆகியவை அடங்கும்.
இதையும் படிங்க Apple iPhone 16e VS iPhone 16: இந்த இரு போனில் என்ன வித்தியாசம் எது பெஸ்ட்