OnePlus 15R vs Vivo X200 FE:இந்த இரு போனில் வித்தியாசம் என்ன எது பெஸ்ட்?

Updated on 23-Dec-2025

OnePlus நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போன் சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது இதற்க்கு சரியான போட்டியை தரும் வகையில் எந்த போன் இருக்கிறது என பார்க்கையில் Vivo X200 FE எங்களுக்கு கிடைத்தது இந்த இரு போனின் டிஸ்ப்ளே,ப்ரோசெசர், கேமரா மற்றும் பேட்டரி போன்ற பல அம்சங்களை ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

OnePlus 15R vs Vivo X200 FE:விலை தகவல்

OnePlus 15R ஸ்மார்ட்போன் 12GB+256GB ஸ்டோரேஜ் வகையின் விலை ₹47,999 ஆகவும் , 12GB+512GB ஸ்டோரேஜ் வகையின் விலை ₹52,999 ஆகவும் உள்ளது. Vivo X200 FE ஸ்மார்ட்போன் 12GB+256GB ஸ்டோரேஜ் வகையின் விலை ₹54,999 ஆகவும் உள்ளது.

OnePlus 15R vs Vivo X200 FE: டிஸ்ப்ளே

OnePlus 15R 2800×1272 பிக்சல்கள் ரெசளுசன் மற்றும் 165Hz மாறி ரெப்ரஸ் ரேட்டுடன் 6.83-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. Vivo X200 FE 2640×1216 பிக்சல்கள் ரெசளுசன், 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 5000 nits உள்ளூர் உச்ச பிரகாசத்துடன் 6.31-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

OnePlus 15R vs Vivo X200 FE:ப்ரோசெசர்

OnePlus 15R ஆனது Qualcomm Snapdragon 8 Gen 5 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது Vivo X200 FE ஆனது octa-core MediaTek Dimensity 9300+ ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது.

OnePlus 15R vs Vivo X200 FE:ஒப்பரேட்டிங் சிஸ்டம்

OnePlus 15R Android 16 அடிப்படையிலான OxygenOS 16 யில் இயங்குகிறது. Vivo X200 FE ஒப்பரேட்டிங் Android 15 அடிப்படையிலான Vivo FunTouch OS 15 இல் இயங்குகிறது.

OnePlus 15R vs Vivo X200 FE: கேமரா :-

OnePlus 15R, f/1.8 அப்ரட்ஜர் மற்றும் OIS சப்போர்டுடன் கூடிய 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவையும், பின்புறத்தில் f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவையும் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக் f/2.0 அப்ரட்ஜர் கொண்ட 32-மெகாபிக்சல் கேமராவையும் கொண்டுள்ளது. Vivo X200 FE, f/1.88 அப்ரட்ஜர் கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவையும், f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 8-மெகாபிக்சல் வைட்-என்கில் கேமராவையும், பின்புறத்தில் f/2.65 துளை கொண்ட 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் கேமராவையும் கொண்டுள்ளது. செல்ஃபிகளுக்காக f/2.0 அப்ரட்ஜர் கொண்ட 50-மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது.

OnePlus 15R vs Vivo X200 FE: பேட்டரி பேக்கப்.

OnePlus 15R ஆனது 80W சூப்பர் ஃபிளாஷ் சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் 7400mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் Vivo X200 FE ஆனது 90W ஃபிளாஷ் சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் 6500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது

OnePlus 15R vs Vivo X200 FE: கனெக்டிவிட்டி

Wi-Fi 7, Bluetooth 6.0, NFC, 5G, dual 4G VoLTE மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும். Vivo X200 FE இரட்டை சிம் 5G, LTE, Wi-Fi 2.5, Bluetooth 5.4, GPS, OTG மற்றும் USB Type-C port 2.0 ஆகியவற்றை வழங்குகிறது. OnePlus 15R நீளம் 163.41 mm, அகலம் 77 mm, தடிமன் 8.1 mm மற்றும் எடை 218 கிராம். Vivo X200 FE நீளம் 150.83 mm, அகலம் 71.83 mm, தடிமன் 7.99 mm மற்றும் எடை 186 கிராம் ஆகும் .

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :