iPhone 17க்கு விலையுடன் நெருங்கிய OnePlus 15 போன் அப்படி என்ன அம்சம் இருக்கு புதுசா

Updated on 15-Nov-2025

OnePlus சமிபத்தில் இந்தியாவில் OnePlus 15 அறிமுகம் செய்தது இந்த போனில் இருக்கும் மிக பெரிய ஹைலைட் இதன் விலை தான் எனவே இந்த போனுக்கு சரியான போட்டியை தரும் வகையில் iPhone 17 இருக்கும் டிஸ்ப்ளே,கேமரா, ப்ரோசெசர் போன்றவற்றை ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

OnePlus 15 vs iPhone 17 விலை தகவல்

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் 12ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வகை ரூ,72,999க்கும், 16ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வகை ரூ,79,999க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 17 ஸ்மார்ட்போனின் 256ஜிபி ஸ்டோரேஜ் வகை ₹82,900க்கும், 512ஜிபி ஸ்டோரேஜ் வகை ரூ,1,02,900க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

OnePlus 15 vs iPhone 17:டிஸ்ப்ளே

OnePlus 15 ஆனது 6.78-இன்ச் FHD+ LTPO AMOLED டிஸ்ப்ளேவை 1272×2772 பிக்சல்கள் ரெசளுசன், 1-165Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1800 nits ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. iPhone 17 ஆனது 2622×1206 பிக்சல்கள் ரேசளுசன், 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 3,000 nits வரை ஹை ப்ரைட்னஸ் 6.3-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க வெறும் ரூ,5,399 யில் முதல் TV விலை ஆரம்பம் ஆளுக்கு ஒரு டிவி ஜாலியா இருங்க

OnePlus 15 vs iPhone 17: ப்ரோசெசர்

OnePlus 15 ஆனது Qualcomm Snapdragon 8 Elite Gen 5 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது, அதே நேரத்தில் iPhone 17 ஆனது Apple இன் A19 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது.

OnePlus 15 vs iPhone 17 :ஒப்பரேட்டிங் சிஸ்டம்.

OnePlus 15 ஆனது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட Color OS 16 ஒப்பரேட்டிங் சிஸ்டமில் இயங்குகிறது. அதே நேரத்தில் iPhone 17 ஆனது ஒப்பரேட்டிங் சிஸ்டமுக்கு iOS 26 உடன் வருகிறது.

OnePlus 15 vs iPhone 17: கேமரா

OnePlus 15 ஆனது f/1.8 அப்ரட்ஜர் மற்றும் OIS உடன் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, f/1.8 அப்ரட்ஜர் மற்றும் OIS சப்போர்டுடன் 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் f/2.0 அப்ரட்ஜர் கொண்ட 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது செல்ஃபிக்களுக்காக f/2.4 அப்ரட்ஜர் கொண்ட 32-மெகாபிக்சல் முன் கேமராவையும் கொண்டுள்ளது. iPhone 17 ஆனது f/1.78 அப்ரட்ஜர் கொண்ட 48-மெகாபிக்சல் ப்ரைமரி ஃப்யூஷன் கேமரா மற்றும் f/2.2 துளை கொண்ட 48-மெகாபிக்சல் ஃப்யூஷன் அல்ட்ரா-வைட் கேமராவையும் கொண்டுள்ளது. இது செல்ஃபிக்களுக்காக f/1.9 அப்ரட்ஜர் கொண்ட 18-மெகாபிக்சல் முன் கேமராவையும் கொண்டுள்ளது.

OnePlus 15 vs iPhone 17:கனெக்ஷன்

OnePlus 15 இல் 5G, Wi-Fi, NFC, Bluetooth 5.4, GPS, BDS, GALILEO, QZSS மற்றும் NavIC ஆதரவு ஆகியவை அடங்கும். iPhone 17 இல் NFC, GPS, 5G, Wi-Fi 7, eSIM ஆதரவு, Bluetooth 6 மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :