Nothing Phone 4a Pro vs Redmi Note 15 Pro Plus
Nothing அதன் 4a சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்தது, மேலும் இந்த சீரிஸின் கீழ் Nothing Phone 4a மற்றும் Nothing Phone 4a Pro அறிமுகம் செய்தது, இப்பொழுது இந்த Nothing Phone 4a Pro உடன் சரியான போட்டியை தரும் வகையில் Redmi Note 15 Pro Plus கொண்டு வரப்பட்டுள்ளது இந்த இரண்டு போன்களின் டிஸ்ப்ளே, பர்போமான்ஸ், கேமரா மற்றும் பேட்டரி போன்றவற்றை ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.
டிஸ்ப்லேவை பொறுத்தவரை, நத்திங் போன் 4a ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் இரண்டும் 6.83-இன்ச் AMOLED பேனல்களைக் கொண்டுள்ளன. நத்திங் போன் 4a ப்ரோ HDR10Plus சப்போர்ட் 144Hz வரை சூப்பர்-ஸ்மூத் ரெப்ரஸ் ரேட்டையும் வழங்குகிறது. ஸ்க்ரீன் 5,000 நிட்ஸ் வரை ப்ரைட்னாஸ் வழங்குகிறது . டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i ஆல் பாதுகாக்கப்படுகிறது.
அதே போல , Redmi Note 15 Pro Plus ஆனது 1.5K ரெசளுசன் உடன் கொண்ட AMOLED ஸ்க்ரீன் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் Dolby Vision + HDR10Plus சப்போர்டுடன் கொண்டுள்ளது. சூரிய ஒளியில் இதன் ஹை ப்ரைட்னஸ் 3,200 nits ஐ அடைகிறது. இந்த பேனல் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ஆல் பாதுகாக்கப்படுகிறது.
Nothing Phone 4a Pro ஆனது Snapdragon 7 Gen 4 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 12GB வரை LPDDR5X RAM மற்றும் 256GB வரை UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் இன்டர்பேஸ் Nothing OS 4.1 ஆகும், இது Android 16 ஐ அடிப்படையாகக் கொண்டது. நிறுவனம் மூன்று வருட OS அப்டேட்கள் மற்றும் ஆறு வருட செக்யூரிட்டி கனெக்ஷன் உறுதியளிக்கிறது.
இதன் மறுபக்கம் , Redmi Note 15 Pro Plus ஆனது Snapdragon 7s Gen 4 ஆல் இயக்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் 12GB RAM ற்றும் 512GB வரை ஸ்டோரேஜ் சப்போர்ட் செய்கிறது . இதன் சாப்ட்வேர் HyperOS ஆகும், இது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்டது. Redmi நான்கு முக்கிய Android அப்டேட்கள் மற்றும் ஆறு வருட பாதுகாப்பு கனெக்ஷன் உறுதியளித்துள்ளது.
நத்திங் போன் 4a ப்ரோ பின்புறத்தில் டிரிபிள் கேமரா செட்டிங் கொண்டுள்ளது, இதில் 50MP சோனி LYT700C OIS ப்ரைம் கேமரா சென்சார், 3.5x ஆப்டிகல் ஜூம் மற்றும் 140x அல்ட்ரா-ஜூம் கொண்ட 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் ஆகியவை அடங்கும். செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு 32MP முன் கேமரா உள்ளது.
இதற்கிடையில், Redmi Note 15 Pro Plus ஆனது 200MP ப்ரைம் கேமரா சென்சார் மற்றும் 8MP அல்ட்ரா-வைட் லென்ஸைக் கொண்டுள்ளது. முன் கேமராவும் 32MP ஆகும்.
இதையும் படிங்க iPhone 17க்கு டஃப் கொடுக்கும் Samsung Galaxy S26 விலை அம்சங்கள போன்ற அனைத்திலும் கடுமையான போட்டி
நத்திங் போன் 4a ப்ரோ 5,400mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் 50W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது . அதே போல , ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 6,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் 100W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்கை வழங்குகிறது.
விலையைப் பொறுத்தவரை, நத்திங் போன் 4ஏ ப்ரோவிற்கும் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸுக்கும் இடையே ஒரு சிறிய வித்தியாசம் மட்டுமே உள்ளது. நத்திங் போன் 4ஏ ப்ரோவின் அடிப்படை வேரியன்ட் ரூ,39,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, அதே நேரத்தில் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ்ரூ,37,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.