Motorola Signature vs OnePlus 13s
Motorola இன்று இந்தியாவில் அதன் புதிய Motorola Signature போனை அறிமுகம் செய்தது மோட்டோரோலா சிக்னேச்சர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 5 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது, அதே நேரத்தில் ஒன்பிளஸ் 13s குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ப்ரோசெசருடன் வருகிறது மேலும் இந்த இரு போனில் என்ன வித்தியாசம் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.
மோட்டோரோலா சிக்னேச்சர் 12 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் வகை ₹59,999 விலையிலும் , 12 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் வகை ரூ,64,999 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஒன்பிளஸ் 13s ஸ்மார்ட்போன் 12 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் வகை ₹52,999 விலையிலும், 12 ஜிபி + 512 ஜிபி ஸ்டோரேஜ் வகை ₹57,999 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
மோட்டோரோலா சிக்னேச்சர் 6.8-இன்ச் சூப்பர் HD LTPO எக்ஸ்ட்ரீம் AMOLED டிஸ்ப்ளேவை 1264×2780 பிக்சல்கள் தீர்மானம், 165Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 6,200 nits உச்ச பிரகாசத்துடன் கொண்டுள்ளது. OnePlus 13s 6.32-இன்ச் LTPO டிஸ்ப்ளேவை 2640×1216 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் கொண்டுள்ளது.
மோட்டோரோலா சிக்னேச்சர் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 5 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது, அதே நேரத்தில் ஒன்பிளஸ் 13s குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. மோட்டோரோலா சிக்னேச்சர் ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஹலோ UI யில் இயங்குகிறது. OnePlus 13s இயக்க முறைமைக்காக ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஆக்ஸிஜன்OS 15 இல் இயங்குகிறது.
மோட்டோரோலா சிக்னேச்சர் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு 50 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. ஒன்பிளஸ் 13s பின்புறத்தில் f/1.8 அப்ரட்ஜர் கொண்ட 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் பின்புறத்தில் f/2.0 அப்ரட்ஜர் கொண்ட 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராவைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் f/2.0 அப்ரட்ஜர் கொண்ட 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க:பல நாட்களாக காத்திருந்த Motorola யின் புதிய போன் அறிமுகம் விலை மற்றும் அம்சங்கள் பாருங்க
மோட்டோரோலா சிக்னேச்சர் 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. OnePlus 13s 80W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் 5850mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. Xiaomi 15 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,240mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
162.1 mm நீளம், 76.4 mm அகலம், 6.99 mm திக்னஸ் மற்றும் 186 கிராம் எடை கொண்டது. ஒன்பிளஸ் 13எஸ் 150.8 mm நீளம், 71.7 mm அகலம், 8.2 mm திக்னஸ் மற்றும் 185 கிராம் எடை கொண்டது.