Moto G96 5G vs Samsung Galaxy M36:ரூ,20,000க்குள் வரும் இந்த லேட்டஸ்ட் போனில் எது பெஸ்ட்?

Updated on 11-Jul-2025

Motorola சமிபத்தில் இந்தியாவில் அதன் Moto G96 5G போனை அறிமுகம் செய்தது இதன் ஆரம்ப விலை ரூ, 17,999 ஆகும் இதற்க்கு சரியான போட்டியை தரும் வகையில் Samsung Galaxy M36 5G களத்தில் இறக்கப்பட்டுள்ளது இந்த போனும் சுமார் அதே பட்ஜெட் ரேஞ்சில் வரும் நிலையில் இந்த இரு போனையும் ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

Moto G96 5G vs Samsung Galaxy M36:டிஸ்ப்ளே

Moto G96 5G அம்சங்களை பற்றி பேசினால் இந்த போனில் 6.67-இன்ச் முழு-HD+ 10-bit 3D கர்வ்ட் pOLED டிஸ்ப்ளே உடன் 144Hz ரெப்ரஸ் ரேட் சப்போர்ட் செய்கிறது இதனுடன் இதில் 1,600 நிட்ஸ் ப்ரைட்னாஸ் மற்றும் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது

அதுவே Samsung Galaxy M36 5G யில் 6.7 இன்ச் யின் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதில் முழு HD+ ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்கப்படுகிறது.

Moto G96 5G vs Samsung Galaxy M36: ப்ரோசெசர்

இப்பொழுது இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால் Moto G96 5G போனில் Snapdragon 7s Gen 2 SoC ப்ரோசெசருடன் 8GB யின் LPDDR4x ரேம் 256GB யின் UFS 2.2 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் Android 15-அடிபடையின் கீழ் Hello UIஸ்கின் மற்றும் மூன்று வருட செக்யுரிட்டி அப்டேட்கள் ஆகியவை வழங்கப்படும்.

அதுவே Samsung Galaxy M36 5G யில் Exynos 1380 சிப்செட் ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் Samsung Galaxy M36 5G ஆண்ட்ரோய்ட்15 அடிபடையின் கீழ் One UI 7 யில் வேலை செய்யும்

Moto G96 5G vs Samsung Galaxy M36: கேமரா

மோட்டோ G96 5G இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 50-மெகாபிக்சல் Sony Lytia 700C ப்ரைமரி சென்சார் மற்றும் ஆட்டோஃபோகஸ் மற்றும் மேக்ரோ விஷன் சப்போர்டுடன் 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் சென்சார் உள்ளது. இந்த போனில் உள்ள அனைத்து கேமராக்களும் 4K யில் வீடியோ ரேக்கர்டிங்கை சப்போர்ட் செய்கிறது . இந்த போனில் AI போட்டோ அப்டேட் போன்ற மோட்டோ AI இமேஜிங் அம்சங்களும் உள்ளன.

இதன் மறுபக்கம் Samsung Galaxy M36 5G யில் 50 மெகாபிக்சல் OIS சப்போர்ட் கொண்ட ப்ரைமரி கேமரா, 8 மேகபிக்சல் அல்ட்ராவைட் கேமரா வழங்கப்படுகிறது மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா வழங்கப்படுகிறது மற்றும் இதில் செல்பிக்கு முன் பக்கத்தில் 13 மெகாபிக்சல் கேமரா வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க:Samsung Galaxy Z Fold 7 vs Z Fold 6: இந்த ஆண்டு புதுசா samsung என்ன கொண்டு வந்து இருக்கிறது என்ன வித்தியாசம்

Moto G96 5G vs Samsung Galaxy M36: பேட்டரி

Moto G96 5G போனில் 5,500mAh பேட்டரி உடன் 33W வயர்ட் டர்போபவர் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது.

அதுவே Samsung Galaxy M36 5G யில் 5,000mAh பேட்டரியுடன் 25W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது.

Moto G96 5G vs Samsung Galaxy M36: விலை தகவல்.

இந்தியாவில் மோட்டோ G96 5G விலை 8GB + 128GB விருப்பத்திற்கு ரூ. 17,999 யில் தொடங்குகிறது, அதே நேரத்தில் 8GB + 256GB வகையின் விலை ரூ. 19,999 ஆகும்.

அதுவே இதன் மறுபக்கம் Samsung Galaxy M36 5G யில் 6GB+128GB யின் விலை ரூ,16,499 அதன் 8GB+128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ,17,999 மற்றும் 8GB+256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூ,20,999 ஆக இருக்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :