Moto G67 Power 5G vs Vivo Y31 (1)
Motorola சமிபத்தில் இந்தியாவில் அதன் புதிய Moto G67 Power 5G போனை அறிமுகம் செய்தது இதற்க்கு ஈடு கொடுக்கும் வகையில் அதன் Vivo Y31 5G போனை கொண்டு வந்துள்ளோம் மோட்டோ ஜி67 பவர் 5ஜி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜெனரல் 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, அதே நேரத்தில் Vivo Y31 5ஜி, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 2 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த இரு போனின் டிஸ்ப்ளே,ப்ரோசெசர் மற்றும் கேமரா போன்றவற்றை ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்.
மோட்டோ G67 பவர் 5G ஸ்மார்ட்போன் 8GB+128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ,15,999 . Vivo Y31 5G ஸ்மார்ட்போன் 4GB+128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ,14,199 மற்றும் 4GB+128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ,15,999 ஆகும்
மோட்டோ G67 பவர் 5G ஆனது 1080×2400 பிக்சல்கள் ரெசளுசன் , 120Hz ரெப்ரஸ் ரேட் , 20:9 ரெப்ரஸ் ரேட் மற்றும் 85.97 சதவீத ஸ்க்ரீன் -பாடி ரேசியோவுடன் கூடிய 6.7-இன்ச் முழு HD+ LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. Vivo Y31 5G ஆனது 1608×720 பிக்சல்கள் ரெசளுசன், 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1000 nits வரை ஹை ப்ரைட்னஸ் கூடிய 6.68-இன்ச் HD+ LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
மோட்டோ ஜி67 பவர் 5ஜி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 7S ஜெனரல் 2 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது, அதே நேரத்தில் Vivo Y31 5ஜி, ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 2 செயலி மூலம் இயக்கப்படுகிறது.
மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஹலோ யுஎக்ஸ்-இல் இயங்குகிறது. விவோ ஒய்31 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஃபன்டூச்ஓஎஸ் 15-இல் இயங்குகிறது.
மோட்டோ G67 பவர் 5G ஸ்மார்ட்போனில் f/1.8 துளை கொண்ட 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, f/2.2 துளை கொண்ட 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் பின்புறத்தில் டூ-இன்-ஒன் ஃபிளிப் கேமரா உள்ளது. செல்ஃபிக்களுக்காக f/2.2 துளை கொண்ட 32 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. Vivo Y31 5G ஸ்மார்ட்போனில் f/1.8 துளை கொண்ட 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் பின்புறத்தில் f/3.0 துளை கொண்ட 0.08 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா உள்ளது. செல்ஃபிக்களுக்காக f/2.0 துளை கொண்ட 8 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.
இதையும் படிங்க:உங்கள் பேங்க் அக்கவுண்டில் தானாகவே AutoPay மூலம் பணம் எடுக்கும்போது பகிர்னு இருக்க அதை ஸ்டாப் செய்வது எப்படி
மோட்டோ G67 பவர் 5G ஸ்மார்ட்போன் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 7,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. விவோ Y31 5G ஸ்மார்ட்போன் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 6,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.