Moto G06 Power vs Samsung Galaxy M07: ஒரே விலை ரேன்ஜில் வரும் இந்த போனில் என்ன வித்தியாசம் இருக்கு

Updated on 08-Oct-2025

Motorola நேற்று இந்தியாவில் அதன் மிகவும் குறைந்த விலையில் Moto G06 Power அறிமுகம் செய்தது இதனுடன் இந்த போனுக்கு சரியான பொட்டிய தரும் வகையில் எந்த போன் இருக்கிறது என பார்க்கும்போது எங்களுக்கு Samsung Galaxy M07 போன் சரியாக இருக்கும் என நினைத்தோம் அந்விலையில் இந்த இரு போன்களின் ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

Moto G06 Power vs Samsung Galaxy M07 விலை

Moto G06 Power யின் 4GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் போனின் விலை 7,499 ஆகும் அதுவே Samsung Galaxy M07 அதன் 4GB/64GB ஸ்டோரேஜ் விலை ரூ,7,699 ஆகும்.

Moto G06 Power vs Samsung Galaxy M07: டிஸ்ப்ளே

மோட்டோ G06 பவர் 6.88-இன்ச் HD+ டிஸ்ப்ளேவை 720×1640 பிக்சல்கள் ரெசளுசன், 120Hz ரெப்ராஸ் ரேட் 395ppi பிக்சல் டென்சிட்டி மற்றும் 600 nits ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது. அதுவே இதன் மறுபக்கம் Samsung Galaxy M07 6.7-இன்ச் PLS LCD HD+ டிஸ்ப்ளேவை 720×1600 பிக்சல்கள் ரேசளுசன் மற்றும் 90Hz ரெப்ராஸ் ரெட்டுடன் கொண்டுள்ளது.

Moto G06 Power vs Samsung Galaxy M07:ப்ரோசெசர்

மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி81 எக்ஸ்ட்ரீம் ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது, அதே நேரத்தில் சாம்சங் கேலக்ஸி எம்07 ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி99 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. இதை தவிர இந்த போனில் எந்த போனிலும் தர முடியாத அளவுக்கு Dolby Atmos ஸ்டீரியோ ஸ்பீக்கர் ஸ்பீக்கர் வழங்குகிறது, மேலும் இதன் ஒப்பரேட்டிங் சிஸ்டம் பற்றி பேசுகையில் மோட்டோ ஜி06 பவர் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஹலோ யுஐ-யில் இயங்குகிறது. சாம்சங் கேலக்ஸி எம்07 ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஒன் யுஐ 7.0-ல் இயங்குகிறது.

இதையும் படிங்க : கம்மி விலையில் Dolby Atmos மற்றும் 7000mAh பேட்டரி Motorola மட்டும் தான் தர முடியும்

Moto G06 Power vs Samsung Galaxy M07: ஸ்டோரேஜ் வேரியன்ட்

மோட்டோ ஜி06 பவர் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது, இதை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை விரிவாக்கலாம். சாம்சங் கேலக்ஸி எம்07 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது, இதை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 2டிபி வரை விரிவாக்கலாம்..

Moto G06 Power vs Samsung Galaxy M07: கேமரா அமைப்பு

மோட்டோ G06 பவர் பின்புறத்தில் f/1.8 துளை கொண்ட 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்காக f/2.0 அப்ரட்ஜர் கொண்ட 8 மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது. Samsung Galaxy M07 பின்புறத்தில் f/1.8 அப்ரட்ஜர் கொண்ட 50 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் கேமராவையும், f/2.4 அப்ரட்ஜர் கொண்ட 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமராவையும் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்காக f/2.0 துளை கொண்ட 8 மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது.

Moto G06 Power vs Samsung Galaxy M07 பேட்டரி

மோட்டோ G06 பவர் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 7,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. Samsung Galaxy M07 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. .

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :