Lava Play Max vs Poco C85 5G: லேட்டஸ்டா அறிமுகமான இந்த இரண்டு போனில் எது பெஸ்ட்?

Updated on 12-Dec-2025

Lava நிறுவனம் இந்திய சந்தையில் புதிய குறைந்த விலை ஸ்மார்ட்போனான Lava Play Max அறிமுகப்படுத்தியுள்ளது இது மிகவும் குறைந்த பட்ஜெட்டில் வரும் போன் ஆகும், ஆனால் இதற்க்கு சரியான போட்டியை தரும் வகையில் Poco C85 5G டிஸ்ப்ளே, ப்ரோசெசர், கேமரா மற்றும் பேட்டரி போன்றவற்றை ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

Lava Play Max vs Poco C85 5G:விலை தகவல்

Lava Play Max 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வகை ₹12,999 விலையிலும், 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வகை ₹14,999 விலையிலும் கிடைக்கிறது. Poco C85 5G 4 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வகை ₹11,999 விலையிலும் , 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வகை ₹12,999 விலையிலும் கிடைக்கிறது..

Lava Play Max vs Poco C85 5G: டிஸ்ப்ளே

Lava Play Maxபோனில் 1080 x 2400 பிக்சல்கள் ரெசளுசன் மற்றும் 120Hz ரெப்ரஸ் ரெட்டுடன் இதில் 6.72-இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. Poco C85 5G 1600 x 720 பிக்சல்கள் ரேசளுசன், 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 810 nits ஹை ப்ரைட்னஸ் உடன் 6.9-இன்ச் HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

Lava Play Max vs Poco C85 5G:ப்ரோசெசர்

Lava Play Max ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது, அதே நேரத்தில் போகோ C85 5G மீடியாடெக் டைமன்சிட்டி 6300 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. .

Lava Play Max vs Poco C85 5G:ஒப்பரேட்டிங் சிஸ்டம்

Lava Play Max போனில் ஆண்ட்ராய்டு 15 யில் இயங்குகிறது. Poco C85 5G ஆண்ட்ராய்டு 15 ஐ அடிப்படையாகக் கொண்ட ஹைப்பர்ஓஎஸ் 2.2 யில் இயங்குகிறது.

Lava Play Max vs Poco C85 5G:கேமரா செட்டிங்

லாவா ப்ளே மேக்ஸின் பின்புறத்தில் EIS சப்போர்டுடன் கூடிய 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு 8 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. Poco C85 5G பின்புறத்தில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு கொண்ட 8 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.

Lava Play Max vs Poco C85 5G:பேட்டரி பேக்கப்

Lava Play Max போனில் 5,000mAh பேட்டரியைக்  33W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் கொண்டுள்ளது. Poco C85 5G போனில் 6,000mAh பேட்டரியுடன் 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் பேட்டரியைக் கொண்டுள்ளது.

Lava Play Max vs Poco C85 5G:கனெக்ஷன் விருப்பங்கள்

லாவா ப்ளே மேக்ஸில் 5G, டூயல் 4G VoLTE, Wi-Fi 6, ப்ளூடூத் 5.2, GPS மற்றும் ஒரு USB டைப்-C போர்ட் ஆகியவை அடங்கும். Poco C85 5G-யில் 5G, 3.5mm ஆடியோ ஜாக், டூயல் 4G VoLTE, Wi-Fi, ப்ளூடூத் 5.4, GPS மற்றும் ஒரு USB டைப்-C போர்ட் ஆகியவை அடங்கும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :