iQOO 15 vs Realme GT 8 Pro:புதுசா மார்கெட்டில் வந்த இந்த இரண்டு போனில் எது பெஸ்ட்

Updated on 28-Nov-2025

iQOO சமிபத்தில் அதன் ப்ளாக்ஷிப் iQOO 15 போனை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது, இப்பொழுது இதற்க்கு சரியான போட்டியாக Realme GT 8 Pro களத்தில் இறக்கியுள்ளது இப்பொழுது இந்த இரு போன்களின், டிஸ்ப்ளே, ப்ரோசெசர் மற்றும் பேட்டரி போன்றவற்றை ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

iQOO 15 vs Realme GT 8 Pro டிஸ்ப்ளே :-

iQOO 15 ஸ்மார்ட்போன் 6.85-இன்ச் Samsung M14 8T LTPO AMOLED டிஸ்ப்ளேவை 2K ரெசளுசன், 144Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 6000 nits ஹை ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது. Realme GT 8 Pro ஸ்மார்ட்போன் 6.79-இன்ச் QHD+ BOE Q10 நெகிழ்வான AMOLED டிஸ்ப்ளேவை 3136×1440 பிக்சல்கள் ரெசளுசன், 508ppi பிக்சல் அடர்த்தி, 144Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 2000 nits ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது.

iQOO 15 vs Realme GT 8 Pro ப்ரோசெசர்:-

iQOO 15 ஆனது Qualcomm Snapdragon 8 Elite Gen 5 ப்ரோசெசர் யில் இயக்கப்படுகிறது, அதே நேரத்தில் Realme GT 8 Pro ஆனது Qualcomm Snapdragon 8 Elite Gen 5 செயலி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இதன் ஒப்பரேட்டிங் சிஸ்டம் பற்றி பேசுகையில் iQOO 15 ஆனது ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான OriginOS 6 இல் இயங்குகிறது. Realme GT 8 Pro ஆனது ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான Realme UI 7.0 உடன் வருகிறது.

iQOO 15 vs Realme GT 8 Pro கேமரா:-

iQOO 15 இன் பின்புறத்தில் OIS சப்போர்டுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமர் கேமரா, 3x ஆப்டிகல் ஜூம், 3.7x லாஸ்லெஸ் ஜூம் மற்றும் 10x ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு 32 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. ரியல்மி GT 8 ப்ரோவின் பின்புறத்தில் f/2.0 அப்ரட்ஜர் கொண்ட 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா, f/1.9 அப்ரட்ஜர் கொண்ட 50 மெகாபிக்சல் ப்ரைம் கேமரா மற்றும் f/2.6 அப்ரட்ஜர் கொண்ட 200 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ காலிர்க்காக f/2.4 அப்ரட்ஜர் கொண்ட 32 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.

இதையும் படிங்க Phone 17க்கு விலையுடன் நெருங்கிய OnePlus 15 போன் அப்படி என்ன அம்சம் இருக்கு புதுசா

iQOO 15 vs Realme GT 8 Pro பேட்டரி பேக்கப்:-

iQOO 15 ஆனது 100W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் 7,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. Realme GT 8 Pro ஆனது 120W வேகமான சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் 7,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

iQOO 15 vs Realme GT 8 Pro கனெக்டிவிட்டி:-

iQOO 15 ஸ்மார்ட்போன் 5G, Wi-Fi 7, Bluetooth 5.4, OTG, NFC, GPS, டூயல்-சிம் சப்போர்ட் மற்றும் USB Type-C போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. Realme GT 8 Pro ஸ்மார்ட்போன் 5G, Wi-Fi 7, Bluetooth 6.0, NFC, GPS, டூயல்-சிம் ஆதரவு மற்றும் USB Type-C போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
டைமென்ஷன் பொறுத்தவரை iQOO 15 ஸ்மார்ட்போன் 163.65 mm நீளம், 76.8 mm அகலம், 8.17 mm திக்னஸ் மற்றும் 220 கிராம் எடை கொண்டது. Realme GT 8 Pro ஸ்மார்ட்போன் 161.80 மிமீ நீளம், 76.87 mm அகலம், 8.2 mm திக்னஸ் மற்றும் 214 கிராம் எடை கொண்டது.

iQOO 15 vs Realme GT 8 Pro விலை தகவல்

iQOO 15 ஸ்மார்ட்போனின் 12GB+256GB ஸ்டோரேஜ் வகை ரூ,72,999க்கும், 16GB+512GB ஸ்டோரேஜ் வகை ₹79,999க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Realme GT 8 Pro ஸ்மார்ட்போனின் 12GB+256GB ஸ்டோரேஜ் வகை ரூ,72,999க்கும், 16GB+512GB ஸ்டோரேஜ் வகை ரூ,78,999க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :