ரூ, 8000 பட்ஜெட் ரேஞ்சில் வரும் பெஸ்ட் போன் குடும்பத்துக்கு ஏற்ற பெஸ்ட் போன்

Updated on 25-Jun-2025

நீங்கள் ஒரு 8000,ரூபாய்க்குள் புதிய போன் வாங்க நினைத்தால் உங்களின் பட்ஜெட்க்கு ஏற்ற போனை கொண்டுவந்துள்ளோம் மேலும் இந்த போன்கள் குறைந்த விலை மட்டுமல்லாமல் இது பவர்புல் அம்சங்கள் கொண்டு வந்துள்ளது மேலும் இந்த போனின் லிஸ்ட்டில் Realme Narzo N61, Lava Storm Lite 5G, Tecno Pop 9 5G மற்றும் Lava Shark 5G ஆகிய போங்கள் அடங்கியுள்ளது மேலும் இந்த போங்கள் அனைத்தும் ஒரு 8000ரூபாய் பட்ஜெட்டில் கிடைத்து விடும்.

ரூ,8000 பட்ஜெட்டில் வரும் போன்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

Lava Storm Lite 5G

Lava Storm Lite 5G போனின் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ, 7,999 ஆகும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் 6.75 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே வழங்குகிறது மற்றும் இதில் 1612 × 720 பிக்சல் ரெசளுசனுடன்120Hz ரெப்ராஸ் ரேட் உடன் வருகிறது இதனுடன் இதில் மீடியாடேக் டிமான்சிட்டி 6400 6nm ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 5 மெகபிக்சல்செல்பி கேமரா வழங்கப்படுகிறது 5000mAh பேட்டரி உடன் வருகிறது.

Lava Shark 5G

லாவா ஷார்க் 5ஜியின் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.7,999 . ஷார்க் 5ஜி 6.7-இன்ச் HD பிளஸ் LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 90Hz ரெப்ரஸ் ரேட்டை கொண்டுள்ளது. இந்த ஃபோனில் Unisoc T765 6nm சிப்செட் உள்ளது. இந்த ஃபோனில் 18W சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரி உள்ளது. இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு 15 இல் இயங்குகிறது. இந்த ஃபோனின் பின்புறம் 13-மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 5-மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.

Realme Narzo N61

realme Narzo N61 யின் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ,7,338க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இதன் அம்சங்களை பற்றி பேசினால் இந்த போனின் டிஸ்ப்ளே 6.74 இன்ச் உடன் இதில் 1600×720 பிக்சல் ரெசளுசன் இதன் பின்புறத்தில் 32MP ப்ரைமரி கேமரா மற்றும் 5000 mAh பேட்டரி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க Google யின் இந்த போனில் ரூ,12000 வரை அதிரடி டிஸ்கவுண்ட்

Tecno Pop 9 5G

டெக்னோ பாப் 9 5G இன் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.7,999 . டெக்னோ பாப் 9 5G 6.67-இன்ச் HD + LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 120Hz ரெப்ரஸ் ரேட்டை கொண்டுள்ளது. இது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 செயலியைக் கொண்டுள்ளது. பாப் 9 5G பின்புறத்தில் 48-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவையும், முன்பக்கத்தில் 8-மெகாபிக்சல் செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. இந்த தொலைபேசியில் 18W வயர்டு சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் 5,000mAh பேட்டரி உள்ளது.

POCO C65

POCO C65 போனில் 4 GB ரேம் மற்றும் 128 GB ஸ்டோரேஜ் விலை ரூ,8,499 யில் வருகிறது மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், POCO C65 (6.74 இன்ச்) HD+ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் பின்புற கேமரா 50MP + AI Lens + 2MP வழங்கப்படுகிறது மற்றும் செல்பிக்கு முன் பக்கத்தில் 8MP கேமரா வழங்கப்படுகிறது, மேலும் இதில் Helio G85 ப்ரோசெசர் மற்றும் 5000 mAh பேட்டரி வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :