Apple iPhone 17 சீரிஸ் vs iPhone 16 சீரிஸ் எதை வாங்கலாம்? இம்முறை என்ன மாற்றம்

Updated on 10-Sep-2025

Apple அதன் Awe Dropping eventயில் iPhone 17 சீரிஸ் அறிமுகம் செய்தது, இதனுடன் இதில் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் வரிசையில் iPhone 17, iPhone 17 Pro, மற்றும் iPhone 17 Pro Max போன்றவை அறிமுகம் செய்துள்ளது மேலும் இந்த iPhone 17 series இம்முறை பல அப்க்ரெட் செய்யப்பட்டுள்ளது டிஸ்ப்ளே,கேமரா மற்றும் பர்போமான்ஸ் கொண்ட பல அப்க்ரேட் செய்யப்பட்டுள்ளது மேலும் கடந்த ஆண்டு iPhone 16 சீரிஸ் உடன் ஒப்பிட்டு இதில் என்ன புதுசா அப்டேட் செய்யப்பட்டிருக்கு என்பதை பார்க்கலாம் வாங்க.

iPhone 17 சீரிஸ் vs iPhone 16 சீரிஸ் : என்ன புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது ?

இம்முறை நாம் மிகவும் iphone Plus மாடல் அறிமுகமாகும் என ஆர்வமாக காத்து கொண்டிருந்தபோது ஒரு பெரிய ஷாக் கொடுத்து அதன் புதிய iPhone Air அறிமுகம் செய்தது. iPhone Air மிகவும் பவர்புல் போன் ஆகும் iPhone Air வெறும் 5.6mm திக்னஸ் மற்றும் மெல்லிய இடை உடன் பிரம்மாதமான லும் தருகிறது அதாவது இதுவரை இல்லாத அளவுக்கு ஆப்பிளின் ஸ்லிம்மஸ்ட் போன் ஆக இருக்கும்.

டிசைனில் மாற்றம்: இதன் மறுபுறம் iPhone 17 Pro மற்றும் iPhone 17 Pro Max அதன் டிசைனில் மிக பெரிய அளவில் மாற்றம் செய்துள்ளது, மேலும் அதன் Pro மாடலில் கடந்த ஆண்டை போல அதே டைடானியம் பில்ட் இதனுடன் இதில் புதிய அலுமினியம் யூனிபாடி டிசைன் கொண்டுள்ளது மேலும் இம்முறை Apple அதன் வழக்கமான சதுர வடிவ கேமராவிலிருந்து நீக்கி இப்பொழுது ஹோரிசாண்டல் கெமர கொண்டு வந்துள்ளது

பேட்டரி மற்றும் டிஸ்ப்ளேவில் இருக்கு மிக பெரிய மாற்றம் : இப்பொழுது அதன் டிஸ்ப்ளேவில் மிக பெரிய மாற்றம் கொண்டு வந்துள்ளது கடந்த ஆண்டு அறிமுகமான iPhone 16 போனில் 60Hz ரெப்ராஸ் ரேட் அதுவே இம்முறை iPhone 17 போனில் 120Hz ரெப்ரஸ் ரேட்டுக்கு அப்க்ரெட் ஆகியுள்ளது மேலும் இதன் டிஸ்ப்ளே இப்பொழுது 3000 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்குகிறது.

பர்போமான்ஸ் அதிகரிப்பு: ஐபோன் 17 மற்றும் ஏர் மாடல்கள் A19 சிப்செட்டால் இயக்கப்படுகின்றன. மறுபுறம், சமீபத்திய ப்ரோ மாடல்கள் A19 ப்ரோ சிப்செட்டால் சப்போர்ட் செய்கிறது. ஐபோன் 16 வரிசையுடன் ஒப்பிடும்போது ஐபோன் 17 சீரிஸ் சிறந்த பேட்டரி ஆயுளைக் கொண்டுள்ளது என்று ஆப்பிள் கூறுகிறது.

இதையும் படிங்க:Apple iPhone 17 Pro Max, iPhone 17 Pro மற்றும் iPhone 17 வேற லெவல் அம்சங்களுடன் அறிமுகம்

கேமரா அப்டேட்கள் : அடிப்படை ஐபோன் 17 மாடலில் முதல் முறையாக அனைத்து 48MP பின்புற கேமராக்களும் உள்ளன. 48MP ஃபியூஷன் ப்ரைம் கேமரா மற்றும் 48MP ஃபியூஷன் அல்ட்ரா வைட் லென்ஸ் உள்ளது. செல்ஃபிக்களுக்கு, இது மேம்படுத்தப்பட்ட 18MP செல்ஃபி ஷூட்டரைப் பெறுகிறது.

இப்போது, ​​ப்ரோ மாடல்களைப் பற்றிப் பேசலாம். ஐபோன் 17 ப்ரோ மாடல்கள் அப்டேட் செய்யப்பட்ட கேமரா அமைப்பையும் கொண்டுள்ளன, இதில் 48MP ஃப்யூஷன் பிரதான கேமரா, 48MP ஃப்யூஷன் அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 48MP ஃப்யூஷன் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், இரண்டு மாடல்களும் 24MP கேமராவைக் கொண்டுள்ளன.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :