Tamilnadu Election 2026: தமிழ் நாட்டில் தேர்தல் 2026 ஆண்டு நடக்க இருக்கிறது அதற்க்கான வேலைகள் தற்பொழுது மிகவும் அரவரமாக நடந்து வருகிறது . அந்த வகையில் ஒவ்வொரு குடி மகனுக்கும் வாக்கு அளிப்பது மிக அவசியமாகும் மேலும் நீங்கள் 18 வயதை பூர்த்தி அடைந்த நிலையில் உங்களிடம் Voter ID இல்லை என்றால் வாக்களிக்க முடியாதது தற்பொழுது டிஜிட்டல் வோட்டர் ஐடி வந்துவிட்டது அதை எப்படி உருவாக்குவது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
மேலும் தமிழ்நாடு எலெக்ஷன் தற்பொழுது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது தமிழ் நாட்டில் பல லீடிங் கட்சிகள் இருக்கிறது DMK, ADMK, நாம் தமிழர் கட்சி மேலும் தற்பொழுது TVK கட்சி தலைவராக தளபதி விஜய் களத்தில் இறங்கியுள்ளார் மேலும் இவர் புதிய TVK ஆப் மூலம் உறுப்பினர் சேர்ந்து வருகிறார் மேலும் இவரின் நடிப்பின் ரசிகராக பலர் இருந்தாலும் அரசியல் கட்சி தலைவராக எப்படி என்பதை 2026 என்பது தான் தெரியும் நீங்கள் இந்த டிஜிட்டர் வோட்டர் ஐடி கார்ட் உருவாக்கி தங்களுக்கு பிடித்த தலைவரை தேர்ந்டுக்கலம்
PVC Voter ID Card அறிமுகம்
Election Commission of India (ECI) அதன் பயனர்களுக்கு PVC Voter ID Card உருவாக்கியுள்ளது , இது பார்க்க ATM கார்ட் போல தான் இருக்கும் மற்றும் இது ப்ளாஸ்டிக் பொருளை வைத்து செய்யப்பட்டது இதில் பார்க்க தனித்துவமாக இருக்கும் அதாவது இதில் புதிய முறையான செக்யூரிட்டி அம்சம் ஹெலோக்ரம் போன்ற அம்சம், மைக்ரோ டெக்ஸ்ட் மற்றும் QR கோட் போன்றவை அடங்கும். இந்த டிஜிட்டல் கார்டைஉழைக்கக் கூடியது மட்டுமல்ல, அதை உங்கள் பாக்கெட்டிலோ அல்லது வாலேட்டில் எளிதாக வைத்திருக்க முடியும்
முதலில் அதிகாரபூர்வ Election Commission of India Portal வெப்சைட் செல்லவேண்டும்
இப்போது முதலில் தேர்தல் ஆணையத்தின் இந்த வெப்சைட்டில் பதிவு செய்து https://www.elections.tn.gov.in/ உங்கள் அக்கவுன்ட் உருவாக்கவும். இதற்கு நீங்கள் உங்கள் ஈமெயில் ஐடி மற்றும் போன் நம்பர் பயன்படுத்த வேண்டும்.
பதிவுசெய்த பிறகு, உங்கள் அக்கவுண்டில் லாகின் செய்து , வசிப்பிடத்தை மாற்றுதல்/ஏற்கனவே உள்ள வாக்காளர் லிஸ்ட்டில் உள்ளீடுகளைத் திருத்துதல்/EPIC ஐ மாற்றுதல்/Pwd குறிப்பது என்ற விருப்பத்தின் கீழ் தோன்றும் பாரம் 8 ஐக் கிளிக் செய்யவும்.
இதற்குப் பிறகு, நீங்கள் யாருக்காக விண்ணப்பிக்கிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும். நீங்கள் உங்களுக்காக விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், சுயத்தைத் தேர்வுசெய்யவும்.
இதற்குப் பிறகு, உங்கள் EPIC நம்பரை உள்ளிடவும்.
இப்போது உங்களிடம் புதிய வோட்டர் கார்ட் வேண்டுமா அல்லது பழைய கார்டை மாற்ற விரும்புகிறீர்களா என்று கேட்கப்படும். இதில், திருத்தம் இல்லாமல் EPIC ஐ மாற்றுவதற்கான விருப்பத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அடுத்த பக்கத்தில் உங்களைப் பற்றிய தகவல்களைக் காண்பீர்கள், இங்கே நீங்கள் Next என்பதைக் கிளிக் செய்யவும்.
இறுதியாக நீங்கள் ஏன் புதிய கார்ட் உருவாக்குகிறீர்கள் என்று கேட்கப்படும், எனவே இரண்டாவது விருப்பத்தை சொடுக்கவும். இதற்குப் பிறகு உங்கள் பாரம் சமர்ப்பிக்கப்படும், மேலும் உங்களுக்கு ஒரு சர்விஸ் ரெகுவஸ்ட் நம்பர் வழங்கப்படும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.