அனைத்து சேவையும் ஒரே இடத்தில் பெற RailOne ஆப் IRCTC உடன் லிங்க் செய்தால் மட்டும் போதும் எப்படி செய்வது

Updated on 15-Jul-2025

இந்திய ரயில்வே அதன் புதிய ஆப் கரிமுகம் செய்தது இதன் மூலம் மக்கள் அனைத்து அம்சத்தையும் ஒரே இடத்தில் பெற முடியும் அதாவது PNR ஸ்டேட்டஸ், ரயில் எந்த பிளாட்பார்மில் வருகிறது, கூடுதலாக ரயில் டிக்கெட் புக்கிங் போல பல் அம்சம் கிடைக்கும் அதாவது உங்களின் IRCTC அக்கவுண்டில் லிங்க் செய்வதன் மூலம் அனைத்து நன்மைகளும் ஒரே ஆப் யில் பெற முடியும் அந்த ஆப் RailOne, ஆப் என அழைக்கப்படுகிறது.

RailOne ஒரு மொபைல் ஆப் ஆகும் இது இந்திய பயணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் டிக்கெட் புக்கிங் PNR ஸ்டேட்டஸ், ரயில் ஸ்டேசன் நோட்டிபிகேசன் போன்ற பல தகவல்களை ஒரே இடத்தில் பெற RailOne ஆப் சிறந்து ஆகும் இதன் மூலம் நமது பயணம் மிகவும் எளிதாகிறது.

இதையும் படிங்க IRCTC: ரயில் வெகு நேரமாகியும் வரவில்லை, AC வேலை செய்யாதபோது உங்களின் பணம் வாபஸ் எப்படி பாருங்க

RailOne app IRCTC உடன் எப்படி லிங்க் செய்வது ?

  • முதலில் RailOne app உங்களின் மொபைலில் டவுன்லோட் செய்யவும்.
  • அதன் பிறகு ஆப் திறந்து ஒரு புதிய அக்கவுண்ட் திறப்பது அல்லது ஏற்கனவே உள்ளவே அக்கவுண்டை லாகின் செய்யவும்.
  • அதில் ஹோம் ஸ்க்ரீன் பக்கத்தில் IRCTC லிங்க் ஆப்சனை க்ளிக் செய்யவும்.
  • இப்பொழுது IRCTC யூசர் நேம் மற்றும் பாஸ்வர்ட் போடா வேண்டும்.
  • அதன் பிறகு OTP மூலம் உங்கள் அக்கவுண்டை வெரிபை செய்யப்பட்டு உங்கள் அக்கவுண்ட் வெற்றிகரமாக லிங்க் செய்யப்படும்.
  • நீங்கள் ஒருமுறை IRCTC அக்கவுண்டின் லிங்க் செய்த உடன் டிக்கெட் புக் செய்ய தனியாக IRCTC அக்கவுண்ட் திறக்க அவசியமில்லை.
  • அதன் பிறகு ஆப்யில் டிக்கெட் புக்கிங், PNR செக் மற்றும் ரயில் ஷேட்யுள் போன்றவற்றை எளிதாக பெற முடியும்.
  • அதன் பிறகு புக்கிங் ஹிஸ்டரி மற்றும் ரயில் லைவ் ஸ்டேட்டஸ் போன்றவற்றை தெளிவாக பார்க்கலாம்.
  • அதன் பிறகு எளிதாக ரயில் தாமதம் மற்றும் பிளாட்பாரம் மாறுதல் போன்ற தகவல்களையும் பெறலாம்
  • மேலும் இதை அனைத்து பயணிகளும் எளிதாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

RailOne நம் தகவல் பாதுகப்பாக இருக்குமா

RailOne அஅண முழுமையான குறியாக்கத்தைக் கொண்டுள்ளது, உங்கள் டேட்டா பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறது. இது IRCTC விதிமுறைகளின்படி செயல்படுகிறது. பாதுகாப்பு கடைபிடிக்கப்படுகின்றன, பரிவர்த்தனைகள் மற்றும் தனிப்பட்ட விவரங்களின் அடிப்படையில் எந்த ஆபத்தும் இல்லை என்பதை உறுதி செய்கிறது. இந்த ஆப்மூலம் நீங்கள் முழு நம்பிக்கையுடன் சேவைகளைப் பெறலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :