PF அக்கவுண்டில் பிரச்சனை அல்லது குழப்பமா இந்த ஒரு அரசு தளம் உங்களின் அனைத்து கேள்விக்கும் பதில்

Updated on 05-Aug-2025

ஒவ்வொரு மாதமும் சம்பலத்த்கில் இருந்து பிடிக்கப்படும் PF பணம் பாஸ்புக்கில் தெரிவதே இல்லையா மற்றும் இதை தவிர உங்களின் பழைய வேலையில் செய்த PF பணத்தின் என்னகை பற்றிய தகவல் அக்கவுண்டில் தெரியவில்லையா அப்படி என்றால் உங்களுக்கு மிக எளிதான வழி அரசின் ஒரே ஒரு இந்த போர்த்ளின் மூலம் அனைத்து கேள்விக்கு பதில் கிடைத்துவிடும்.

அந்த அரசு வெப்சைட் என்ன?

அந்த அரசின் வெப்சைட் தளம் EPFiGMS ஆகும் இதன் அர்த்தம் Employees’ Provident Fund Grievance Management System ஆகும், இது ஒரு ஆன்லைன் போர்ட்டல் ஆகும் இதில் PF சம்மதம்பட்ட அனைத்து தகவலையும் பெறுவது மட்டுமில்லாமல் எந்த ஒரு பிரச்சனையும் எளிதாக சரி செய்து கொள்ள முடியும்,PF தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் இந்த போர்ட்டலில் எளிதாக தீர்க்க முடியும். இப்போது உங்கள் PF ட்ரேன்ஸ்பேரில் தாமதம் ஏற்பட்டாலும், கோரிக்கை சிக்கியிருந்தாலும், அக்கவுண்டில் ஏதேனும் தவறான தகவல் உள்ளிடப்பட்டிருந்தாலும் அல்லது அலுவலகத்திலிருந்து உங்களுக்கு பதில் கிடைக்காவிட்டாலும், இந்த போர்ட்டலின் உதவியுடன் உங்கள் பிரச்சினைக்கு மிகக் குறுகிய காலத்தில் ஒரு தீர்வைப் பெறலாம். இந்த போர்ட்டலின் சிறப்பு என்னவென்றால் இங்கு எளிதாக புகரளிப்பது மட்டுமல்லாமல் இதில் எதாவது டாக்யுமென்ட் தேவைபட்டாலும் எளிதாக அப்லோட் செய்ய முடியும், மேலும் இதில் எளிதாக புகாருக்கான நிவாரணத்தையும் பெறலாம் சரி வாங்க அது எப்படி செய்வது என்பதை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.

இதையும் படிங்க National Film Awards 2025:தமிழில் யார் வின்னர் விருதுகலில் வென்றவர் யார் யார்

EPFiGMS போர்ட்டலில் எப்படி புகராளிப்பது

PF அக்கவுண்ட் சேர்ந்த எந்த ஒரு அக்கவுண்டிலும் எளிதாக புகரளிப்பது என்பதை பார்க்கலாம்

  1. முதலில் EPFiGMS என்று Google யில் சர்ச் செய்யவும்
  2. அதில் வரும் முதல் லிங்கில் க்ளிக் செய்து மற்றும் பிறகு Register Grievance யில் க்ளிக் செய்யவும்.
  3. அதன் பிறகு உங்களின் ஸ்டேட்டஸ் தேர்ந்டுக்கவும் அதாவது PF Member என்பதை போல.
  4. உங்களின் புகார் எதாவது க்ளைம் சம்மதப்பட்டதாக இருந்தால், உங்களின் க்ளைம் ID போடவும் அதன் பிறகு அனைத்து தகவலும் பெறலாம், Claim ID இல்லாதபோது NO என்பதை தேர்ந்தடுக்கவும் .
  5. இப்பொழுது உங்களின் UAN நம்பர் மற்றும் கேப்ட்சா போட்டவுடன் Get Details என்பதை க்ளிக் செய்யவும்.
  6. அதன் பிறகு உங்களின் போன் நம்பர் மற்றும் ஈமெயில் ID போடவும் அதன் பிறகு ஒரு OTP வரும் அதை போட்டு முன்னோக்கி செல்லவும்.
  7. அதன் பிறகு உங்களின் வீட்டு முகவரி போன்ற அடிப்படை தகவலை நிரப்பவும்.
  8. இப்பொழுது PF நம்பர் என்பதை செலக்ட் செய்து உங்களின் புகரை பற்றி முழு தகவலையும் தெரிவிக்கவும் இதனுடன் அதற்க்கான டாக்யுமென்ட் அட்டச் செய்து சமர்பிக்கலாம்
  9. அதன் பிறகு உங்களின் புகரை சப்மிட் செய்யவும்.

இதில் முக்கியமான விஷயம்

இந்த போர்ட்டலில் புகார் அளிக்கும்போது, இரண்டு விஷயங்களை மனதில் கவனமாக வைக்க வேண்டும் , உங்கள் புகார் தொடர்பான அனைத்து அசல் டாக்யுமேன்ட்களையும் நீங்கள் வழங்க வேண்டும். இது உங்கள் பிரச்சினையை விரைவாக தீர்க்க உதவும். இது தவிர, புகாரைப் பதிவு செய்த பிறகு பெறப்பட்ட புகார் எண்ணை கவனமாக வைத்திருங்கள், இதனால் உங்கள் புகாரின் நிலையை பின்னர் சரிபார்க்கலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :