pan card
இன்றைய காலத்தில் மோசடி அதிவேகமாக அதிகரித்து வருகிறது,வேறு ஒருவரின் ஆதார் கார்ட் பயன்படுத்தி சிம் கார்ட் வாங்குவது அதிகரித்து வருகிறது, அதே போல இப்பொழுது வேற ஒருவரின் PAN card பயன் படுத்தி லோன் வாங்கி அந்த நபருக்கே தெரியாமல் கடனாளியாக மாட்டிவிடுகிறார்கள் , அதே போல உங்கள் பெயரில் கடன் (Loan) வாங்கியுள்ளார்களா என்பதை எப்படி தெரிந்து கொள்வது அவசியமாகும். இந்த PAN கார்டில் நேரடியாக கிரெடிட் ரிப்போர்ட் சேர்க்கப்பட்டிருக்கும் மற்றும் இதில் ஒருவரின் ஒப்புதல் இல்லாமலே கடன் வாங்கி ஈர்க்கலாம் அதை எப்படி திருந்து கொள்வது முழுசா பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு CIBIL மூலம் ரிப்போர்ட்டின் மூலம் கடன் அதாவது லோன் வாங்கியது தெரியவந்தால் அதும் அந்த கடனுக்கும் உங்களுக்கும் எந்த சம்மதமும் இல்லை என்றால், RBI யின் அதிகாரபூர்வ வெப்சைட் cms.rbi.org.in யில் சென்று ஆன்லைன் புகார் அளிக்கலாம், NBFC-யின் பெயர், CIBIL அறிக்கை, PAN கார்ட் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும். இது தவிர, அறிக்கையில் தெரியும் கடன் உள்ள சம்பந்தப்பட்ட வங்கி அல்லது NBFC-யையும் நீங்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். நீங்கள் கடன் வாங்கவில்லை என்று எழுத்துப்பூர்வமாக அவர்களிடம் கூறி, தேவையான ஆவணங்களை வழங்கவும். சட்ட செயல்முறை மேலும் எளிதாக இருக்கும் வகையில் பேங்க் / NBFC-யிடமிருந்து ரசீது பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க:QR Code ஸ்கேன் செய்தலே Aadhaar உண்மையானதா போலியா அம்பலமாகிவிடும்