UIDAI அதன் புதிய Aadhaarஆப் அறிமுகம் செய்தது, இந்த ஆப்பை நீங்கள் Google play store மற்றும் Apple App Store யில் இதை டவுன்லோட் செய்யலாம் மேலும் தற்பொழுது வந்த இந்த புதிய அப்டேட்டின் மூலம் ஆதார் கார்ட் பல மடங்கு பாதுகாப்பாக இருக்கும் அதாவது, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் அட்டை வைத்திருப்பவரின் போட்டோ மற்றும் QR கோடை மட்டுமே கொண்ட ஆதார் கார்ட்களை வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறது. தனிப்பட்ட டேட்டா தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும், ஆஃப்லைன் வெரிபிகேஷன் நடைமுறைகளை ஊக்கப்படுத்தவும் UIDAI இந்த முயற்சியை பரிசீலித்து வருகிறது இதன் மூலம் உங்கள் ஆதார் கார்டை உங்களை தவிர யாரும் நெருங்க முடியாது.
தற்பொழுது அதிகரித்து வரும் ஆதார் தகவல் திருட்டுக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக கொண்டுவரப்பட்டுள்ளது இனி உங்கள் ஆதார் கார்டை கையில் வைத்து திரியவில்லை அதாவது உங்களின் பேஸ் ஸ்கேன் அல்லது பயோமெட்ரிக் மூலம் பாதுகாப்பாக வைக்கலாம் இதன் மூலம் மோசடியை தவிர்க்கலாம்.
இதையும் படிங்க இந்தியாவில் ஒவ்வொரு நம்பரும் +91 யில் வருவது ஏன் கவனித்துல்லிர்களா
மேலும் உங்கள் குடும்பத்தை சார்ந்த மொத்த ஆதார் கார்டையும் ஒரே இடத்தில் வைக்க முடியும், அதாவது நீங்கள் ஒரே ஆப்யில் 5 ஆப் வைக்க முடியும் ஆனால் அந்த ஆதார் கார்ட் அனைத்து ஒரே நம்பரில் லிங்க் செய்யப்பட்டு இருக்க வேண்டும்
இந்த ஆப் உங்கள் பெயர் மற்றும் போட்டோ மட்டும்தானா அல்லது உங்கள் முகவரி அல்லது பிறந்த தேதி போன்ற மிகவும் முக்கியமான விவரங்களைப் பகிர வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க உங்களை அனுமதிக்கிறது. பகிர்வதற்கான QR கோட் அல்லது சரிபார்க்கக்கூடிய சான்றுகளையும் நீங்கள் உருவாக்கலாம், மேலும் உங்கள் முழு 12 டிஜிட் ஆதார் வெளிப்படுத்தாமல், அதை மறைக்கப்பட்ட முறையில் கூட செய்யலாம்.
இந்த செயல்முறையை செய்ய உங்களிடம் இன்டர்நெட் இருக்க வேண்டும் என அவசியமில்லை, நீங்கள் இந்த ஆதார் தகவலை ஆப்லைனிலும் பார்க்கலாம் , உங்கள் ஆதார் எப்போது, எங்கு பயன்படுத்தப்பட்டது என்பதைப் பதிவுசெய்யும் ஒரு செயல்பாட்டுப் பதிவு உள்ளது, இது உங்களுக்கு அதிகத் தெரிவுநிலையையும் பாதுகாப்பையும் வழங்குகிறது.