Instagram Diwali Effect: இன்ஸ்டாக்ராமில் இப்படி வித விதமக தீபாவளி வீடியோ உருவாக்குனா அசந்து போவாங்க

Updated on 17-Oct-2025

Instagram யில் வியாழகிழமை ஒரு புதிய லிமிடெட் எடிஷன் எபக்ட் கொண்டுவரப்பட்டது, பயனர்கள் தங்களின் போட்டோ மற்றும் வீடியோவை பயன்படுத்தி ஒரு புதிய தீபாவளி ஸ்பெஷல் எபக்ட் கொண்டுவர முடியும் இந்த ஆப்ஷன் இன்ஸ்டாக்ராமில் Restyle ஒப்ஷனை பயன்படுத்தி தீபாவளி எபக்டில் உருவாக்கலாம் அதாவது தீபாவளி விளக்கு மற்றும் ரங்கோலி போன்ற அம்சங்கள் கொண்டிருக்கும் இதன் முழு விவரம் மற்றும் இதை எப்படி உருவாக்குவது என பார்க்கலாம் வாங்க.

இன்ஸ்டாக்ரம் தீபாவளி எபக்ட் (Instagram Diwali Effects)

இன்ஸ்டாக்ராமில் மொத்தம் மூன்று புதிய எபக்ட் இருக்கிறது அதில் உங்களின் போட்டோ மற்றும் வீடியோ அப்லோட் செய்வதன் மூலம் பட்டாசுகள்,விளக்குகள் மற்றும் ரங்கோலி கோலங்கள் போன்ற எபக்டில் உருவாக்கலாம் அதே போல இன்னும் லைட்டு எபக்ட், சாமந்தி பூ மற்றும் ரங்கோலி போன்ற எபக்ட் உடன் உங்கள் போட்டோ அல்லது வீடியோவை வைத்து உருவாக்கலாம் மேலும் அது பிடித்து இருந்தால் உங்கள் instagram ஸ்டோரி மற்றும் ரீல்ஸ் உருவாக்கலாம் இந்த அம்சமானது Restyle option யிலிருந்து பெறலாம்.

இதையும் படிங்க கொளுத்தி போடு பட்டச BSNL யின் ரூ,1 பிளான் மீண்டும் வந்தாச்சு அன்லிமிடெட் காலிங்,டேட்டா இனி ஜாலியோ ஜாலி

Instagram-Diwali-Effect-

instagram Restyle அம்சத்தை எப்படி பயன்படுத்துவது?

  • இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில்களில் இந்த சிறப்பு தீபாவளி எபக்ட்களைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது.
  • முதலில், உங்கள் ப்ரோபைல் போட்டோவில் உள்ள ‘+’ பட்டனை அழுத்தவும் அல்லது ஸ்டோரிகளைத் திறக்க மேலே ஸ்வைப் செய்யவும்.
  • இதற்குப் பிறகு, உங்கள் கேலரியில் இருந்து ஏதேனும் போட்டோஅல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்.
  • பின்னர் மேல் லிஸ்ட்டில் உள்ள பெயிண்ட் பிரஷ் ஐகானைத் தட்டவும்.
  • இங்கே நீங்கள் பட்டாசுகள், ரங்கோலி அல்லது தியாக்கள், விளக்குகள், சாமந்தி பூக்கள் அல்லது ரங்கோலி போன்ற தீபாவளி விருப்பங்களைக் காணலாம்.
  • உங்களுக்குப் பிடித்த விளைவைத் தேர்ந்தெடுத்து உங்கள் ஸ்டோரி சிறப்பானதாக்குங்கள்.

எப்படி எடிட் செய்வது?

  • முதலில், Edits ஆப்பை திறந்து, + பட்டனை தட்டுவதன் மூலம் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கவும்.
  • பின்னர் ரீல்கள், கேமரா அல்லது கேலரியில் இருந்து ஒரு வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்.
  • தைம்லைனில் உள்ள வீடியோவைத் தட்டி, Restyle விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • தீபாவளிப் பிரிவில் விளக்குகள், சாமந்தி பூக்கள் அல்லது ரங்கோலி விளைவுகளிலிருந்து தேர்வு செய்யவும்.
  • வீடியோ தயாரானதும், அதை Export செய்யவும்
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :