Aadhaar கார்டில் எந்த மொபைல் நம்பர் லிங்க் செய்தோம் என தெரியவில்லையா ஒரு நொடியில் கண்டுபிக்கலாம் எப்படி பாருங்க

Updated on 29-Aug-2025

Aadhaar Card ஒரு இந்திய குடிமகனுக்கு முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது , அது போல எந்த ஒரு அரசு சார்ந்த வேலை அல்லது பேங்க் அக்கவுண்ட் திறப்பது போன்ற எந்த வேலைக்கும் ஆதார் கார்ட் அவசியம் தேவைப்படுகிறது அந்த வகையில் தற்பொழுது மொபைல் சிம்மிளிருந்து வீட்டு ரேஷன் கார்ட் வரை அனைத்திலும் ஆதார் கார்ட் உடன் லிங்க் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது மோசடி அதிகரித்து வருகிறது அந்த வகையில் நீங்கள் எந்த மொபைல் நம்பர் Aadhaar card உடன் லிங்க் செய்தோம் என தெரியவில்லை என்றால் ஒரு நிமிடத்தில் தெரிந்து கொள்ளலாம் அது எப்படி என்பதை பாருங்க.

இப்போதெல்லாம் நிறைய பேரு பல Sim card வைத்துள்ளார்கள் அதில் எந்த மொபைல் நம்பர் ஆதார் உடன் ரெஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது என்பதை பற்றி தெரியவில்லை மேலும் நீங்கள் ஆதார் கார்ட் பற்றி நிண்ட நாளாக கவலை கொள்ளாமல் இருந்தால் அது விபரிதத்தில் முடியலாம் மேலும் நீங்கள் UIDAI அதிகாரபூர்வ வெப்சைட் மூலம் எளிதாக தெரிந்து கொள்ள முடியும் அது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.

ஆதர் கார்ட் வெறும் சாதாரண அடையாள அட்டை அல்ல அதை தவிர நாம் இதை பைனான்ஸ் தகவல் மற்றும் பல இடங்களில் ஆதார் கார்ட் லிங்க் செய்யப்படுவதால் எச்சரிக்யாக இருப்பது அவசியமாகும் உங்களின் பழைய நம்பர் ஆதாருடன் லிங்க் செய்திருந்தால் ஆனால் அதை பற்றி எந்த தகவலும் தெரியாமல் இருந்தால் உங்களின் மொத்த பணமும் பறிபோகலாம் இதை தவிர என்னவேனாலும் நடக்கலாம் எனவே உங்களின் ஆதர்கார்டில் என்ன நம்பர் லிங்க் செய்யப்பட்டுள்ளது என்பது இப்படி எளிதான முறையில் தெருஞ்சிக்கலம் அது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.

இதையும் படிங்க:Digital Ration Card: டிஜிட்டல் முறையில் கிடைக்கும் இந்த கார்டின்பயன் என்ன ஆன்லைனில் எப்படி வின்னபிப்பது ?

UIDAI அதிகாரபூர்வ வெப்சைட் மூலம் எப்படி தெரிந்து கொள்ளலாம் பாருங்க

  • முதலில் UIDAI யின் அதிகாரபூர்வ வெப்சைட் செல்லுங்க
  • ஹோம் பக்கத்தில் “My Aadhaar”செக்ஷன் செல்லவும்
  • இதில் ஆதார் சர்விஸ் கீழ் Verify Email/Mobile நம்பர் என்பதை க்ளிக் செய்யவும்.
  • இப்பொழுது ஒரு புதிய பக்கம் திறக்கும் அதில் “Verify Mobile Number.” என்பதை தட்ட வேண்டும் இதை தவிர Email தகவல் பெற விரும்பினால் Email என்பதை தட்டவும்
  • உங்களின் ஆதார் நம்பருடன் மொபைல் நம்பரும் போட்டு செக் செய்யவும்
  • அதன் பிறகு கேப்ட்ஜா கொட வரும் அதை நிரப்பி Submit என்பதை கொடுக்க வேண்டும்.
  • நீங்கள் என்டர் செய்த நம்பர் ஆதாருடன் லிங்க் செய்திருந்தால் உங்களுக்கு உங்களின் மொபைல் நம்பர் ஏற்கனவே ரெஜிஸ்டர் செய்யப்பட்டதாக மெசேஜ் வரும்.
  • ஒரு வேலை உங்களின் நம்பர் not linked, என்ற மெசேஜ் வரும் அதாவது இந்த நம்பர் UIDAI ரெக்கார்டில் இல்லை என வரும்
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :