ChatGPT மூலம் அச்சு அசலாக உருவாக்கப்படுகிறது Aadhaar மற்றும் PAN இதில் போலி எது உண்மை எது எப்படி கண்டுபிடிப்பது

Updated on 13-Apr-2025

ChatGPT மூலம் அதன் சொந்த இமேஜ் ஜெனரேசன் டூல் உலக முழுதும் சமிபத்தில் கடந்த வாரமாக மிக சிறந்த ஹிட் அடித்தது மேலும் இதை பயன்படுத்தி மில்லியன் கணக்கான Studio மூலம் Ghibli style போர்டரைட் இமேஜ் உருவாக்கப்படுகிறது இதை பயன்படுத்தி இருப்பினும், ஒரு சாத்தியமான தவறான பயன்பாடும் கண்டறியப்பட்டுள்ளது. போலி Aadhaar கார்ட் மற்றும் Pan கார்டுகளை உருவாக்க ChatGPT-யின் சக்தியைப் பயன்படுத்த ஒரு வழி இருப்பதாகத் தெரிகிறது.

இப்பொழுது சோசியல் மீடியா மூலம் ChatGPT பயன்படுத்தி போலி Aadhaar card மற்றும் PAN card உருவாக்கப்பட்டு ஷேர் செய்யப்படுகிறது. இதை ஒரு (Fun)ஜாலியாக உருவாக்கப்பட்டாலும் இதை Ai டூல் மூலம் உருவாக்கப்படுகிறது இதன் மூலம் அச்சு அசலாக உண்மையானதை போல உருவாக்கப்படுவதால் இதை தவறாக பயன்படுத்தல்ம் ஏன் என்றால் அதே முகவரி மற்றும் தகவல் போன்றவை கொண்டிருக்கிறது.

ChatGPT மூலம் உருவாக்கப்படும் Aadhaar தவறாக பயன்படுத்தலாம்.

பயனர் ஒருவர் ChatGPT மூலம் டொனால்ட் ட்ரம்ப் Aadhaar card ஏதோ ஒரு நம்பர் மூலம் உருவக்கப்படிருந்தர் மேலும் அதில் முகவரி 0000,00pur இந்தியா என குறிப்பிடபட்டிருந்தது

அதே போல ஒரு சோசியல் மீடியா பயனர் (யஸ்வந்த் சாய் பாலகாட்) ஆர்யபட்டாவின் படத்தைப் பகிர்ந்துள்ளார். “ChatGPT போலி ஆதார் மற்றும் பான் கார்டுகளை உடனடியாக உருவாக்குகிறது, இது ஒரு கடுமையான பாதுகாப்பு அபாயமாகும். இதனால்தான் AI ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கட்டுப்படுத்தப்பட வேண்டும்.” என எழுதியிருந்தார்.

இதில் எது உண்மையானது எது AI மூலம் உருவாக்கப்பட்ட Aadhaar கார்ட் என பார்க்கலாம் வாங்க.

  • Aadhaar card சரியானதா என ஆன்லைனில் சரி பார்க்க https://uidai.gov.in/ அல்லது https://myaadhaar.uidai.gov.in/verifyAadhaar செல்ல வேண்டும்.
  • ஸ்டேப் 1: https://myaadhaar.uidai.gov.in/verifyAadhaar செல்ல வேண்டும்
  • ஸ்டேப் 2 : https://myaadhaar.uidai.gov.in/check-aadhaar-validity/en மூலம் செக் ஆதார் வேலிடிட்டியில் க்ளிக் செய்யவும்.
  • ஸ்டெப் 3: இப்பொழுது 12 டிஜிட் ஆதார் நம்பர் மற்றும் captcha கோட் போடவும்.
  • ஒரு வேலை அந்த ஆதார் கார்ட் போலியானதாக இருந்தால் மேலும் உங்களால் தொடர முடியாது மற்றும் வெப்சைட்டில் சரியான ஆதார் நம்பர் போட சொல்லி கேக்கும், மேற்கொண்டு நீங்கள் சரியான நம்பரை போட்டால் மட்டுமே அடுத்த் கட்டத்தை நோக்கி நகர முடியும் ஒரு வேலை நீங்கள் இதை கடந்து விட்டால் உங்களின் ஆதர் நம்பர் வெரிபிகேசன் செய்ய சொல்லி கேக்கும்.
  • ஸ்டேப் 4 : மேலும் ஸ்க்ரீனில் தோன்றும் பெயர்,நாடு மற்றும் பாலினம் போன்றவற்றை சரிபார்க்க வேண்டும்.

ப்ரைவசியாக இருக்க நினைத்தால் Virtual ID பயன்படுத்தவும்.

வெர்ஜுவல் ஐடி (VID) என்பது ஆதார் நம்பருடன் இணைக்கப்பட்ட ஒரு தற்காலிக, திரும்பப்பெறக்கூடிய 16 இலக்க சீரற்ற எண்ணாகும். அங்கீகாரம் அல்லது e-KYC சேவைகள் செய்யப்படும் போதெல்லாம் ஆதார் எண்ணுக்குப் பதிலாக VID ஐப் பயன்படுத்தலாம். ஆதார் எண்ணைப் பயன்படுத்துவதைப் போலவே VID ஐப் பயன்படுத்தி அங்கீகாரம் செய்யப்படலாம். VID இலிருந்து ஆதார் எண்ணைப் பெறுவது சாத்தியமில்லை.

வேறு யாராவது உங்களுக்காக VID ஐ உருவாக்க முடியுமா?

AUA/KUA போன்ற வேறு எந்த நிறுவனமும் ஆதார் எண் வைத்திருப்பவரின் சார்பாக VID-ஐ உருவாக்க முடியாது என்று அரசாங்கம் கூறுகிறது. ஆதார் எண் வைத்திருப்பவர் தானாகவே VID-ஐ உருவாக்க முடியும். பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு SMS மூலம் ஆதார் எண் வைத்திருப்பவர் VID-ஐப் பெறுவார்.

இதையும் படிங்க: நீங்க இன்னும் Aadhaar Card-Voter ID லிங்க் செய்யவில்லயே உங்க வீட்டிலிருந்தபடி எப்படி செய்வது பாருங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :