Amazon Pharmacy
Amazon மக்களுக்கு சந்தோசமான செய்தியை அறிவித்துள்ளது Amazon Pharmacy இப்பொழுது எந்த மருந்து வேண்டுமானாலும் எங்கிருந்தும் வாங்கி கொள்ளலாம் இனி மருந்து கிடைக்கவில்லை என வருத்தம் இருக்காது, இந்த சேவை முதன்முதலில் 2020 யில் இந்தியாவில் ஒரு முன்னோடி திட்டமாக தொடங்கப்பட்டது. இருப்பினும், அந்த நேரத்தில் இந்த சேவை பெங்களூருக்கு மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நிறுவனம் Amazon Pharmacy நாடு முழுவதும் உள்ள நகரங்களில் கிடைக்கச் செய்துள்ளது.
அமேசான் பார்மசி மருந்துகளை வழங்கும் தொலைதூர இடங்களில் அந்தமான் மற்றும் நிக்கோபார் ஐலேன்ட் உள்ள போர்ட் பிளேர் மற்றும் ஹேவ்லாக், லடாக்கில் உள்ள, தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஆக மொத்தம் 25 நாடுகளுக்கு சப்போர்ட் ஆகியவை அடங்கும். இந்தியாவில் 23 பெருநகரங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் ஒரே நாளில் டெலிவரி செய்வதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.
அமேசான் பார்மசியில் இருந்து வாங்கும் மருந்துகளுக்கு சிறப்புச் சலுகைகளையும் அமேசான் அறிவித்துள்ளது. பிரைம் பயனர்கள் ₹ 149 அல்லது அதற்கு மேற்பட்ட ஆர்டர்களுக்கு இலவச டெலிவரி கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தவிர, பிரைம் மெம்பர்கள் அமேசான் பே ICICI பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் கூடுதலாக 5% தள்ளுபடியும் கிடைக்கும். மறுபுறம், பிரைம் மெம்பர்கள் அல்லாதவர்களுக்கு ரூ.299 மற்றும் அதற்கு மேற்பட்ட ஆர்டர்களுக்கு இலவச டெலிவரி கிடைக்கும். பிரைம் மெம்பர்களுக்கு ரூ.149க்கும் குறைவான மதிப்புள்ள ஆர்டர்களுக்கு பயனர்கள் ரூ.60 டெலிவரி கட்டணமாகவும், பிரைம் மெம்பர் அல்லாதவர்களுக்கு ரூ.299 டெலிவரி கட்டணமாகவும் செலுத்த வேண்டும். மருந்து கிடைப்பதைப் பொறுத்தவரை, கஸ்டமர்கள் அமேசானின் மொபைல் ஆப் மற்றும் நிறுவனத்தின் வெப் அடிப்படையிலான தளம் மூலம் அமேசான் பார்மசியில் மருந்துகளை ஆர்டர் செய்யலாம்.
Amazon Pharmacy மூலம் மிகவும் பாதுகாப்பாக டெலிவரி செய்யும் பாதுகாப்பான பேக்கேஜிங் முதல் சுகாதாரமான டெலிவரி வரை சிறந்த-இன்-கிளாஸ் செயல்முறைகளைப் பயன்படுத்துகிறது, வாடிக்கையாளர்கள் தங்கள் சுகாதாரத் தேவைகளுக்கு அமேசானின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை நம்புவதை உறுதி செய்கிறது. பிரத்யேக சேமிப்பு, பாஸ்ட் டெலிவரி மற்றும் கஸ்டமர்களின் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்து செலுத்தும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க:OnePlus யின் இந்த போனில் அதிரடி டிஸ்கவுண்ட் வெறும் ரூ.13,649 யில் வாங்கலாம்