Amazon-Great-Indian-Festival-vs-Flipkart-Big-Billion-Days-Sale-2025
பண்டிகை காலம் சிறப்பு விற்பனை Amazon மற்றும் Flipkart ஒரே நாளில் விற்பனை தொடங்க இருக்கிறது, இரண்டு இந்திய இ-ஜாம்பவான்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் மீண்டும் இதில் பங்கேற்க உள்ளன. இரண்டும் தங்கள் மிகப்பெரிய விற்பனையை அறிவித்துள்ளன. இந்த ஆண்டு அமேசான் செப்டம்பர் 23 ஆம் தேதியை Great Indian Festival பிளிப்கார்ட்டை Big Billion Days Sale தேர்வு செய்துள்ளது.இந்த விற்பனையின் கீழ் ஸ்மார்ட்போன், லேப்டாப், TV மற்றும் லேப்டாப் போன்றவற்றில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது .
அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் மற்றும் பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் சேல் இரண்டும் செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்குகின்றன. பிரைம் உறுப்பினர்கள் ஒரு நாள் முன்னதாக, அதாவது செப்டம்பர் 22 முதல் அமேசானில் முன்கூட்டியே அணுகலைப் பெறுவார்கள். அதே நேரத்தில், பிளிப்கார்ட் பிளஸ் மற்றும் பிளாக் உறுப்பினர்களும் செப்டம்பர் 22 ஆம் தேதி இரவு முதல் ஷாப்பிங் செய்யும் வசதியைப் பெறுவார்கள். இரண்டு விற்பனையிலும் உள்ள மற்ற வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 23 ஆம் தேதி தொடக்கத்தில் (நள்ளிரவு) இருந்து விற்பனையில் சேர அனுமதிக்கப்படுவார்கள்.
அமேசானில் SBI கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு 10% கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். இதனுடன், Amazon Pay Later உள்ள பயனர்களும் சலுகைகளைப் பெறுவார்கள். Amazon Pay ICICI பேங்க் கிரெடிட் கார்டில் பிரைம் மெம்பர்களுக்கு 5% (பிரைம் மெம்பர்கள் அல்லாதவர்களுக்கு 3%) கேஷ்பேக் கிடைக்கும். பல பொருட்களில் நோ கோஸ்ட் EMI சலுகை மற்றும் எக்ஸ்சேஞ் போனஸ் போன்ற போனஸ் ரிவார்ட்ஸ் சேர்க்கப்படும். அமேசான் பல பொருட்களில் தள்ளுபடி கூப்பன்களையும் வழங்குகிறது.
மறுபுறம், பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ஆக்சிஸ் மற்றும் ICICI பேங்க் கார்ட்களை கொண்ட பயனர்களுக்கு 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடியை ஃப்ளிப்கார்ட் வழங்குகிறது , மேலும் நோ கோஸ்ட் EMI, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் சூப்பர்காயின்ஸ் தள்ளுபடி போன்ற சலுகைகளையும் வழங்குகிறது. ஃப்ளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டில் 5% பிளாட் கேஷ்பேக் கிடைக்கும்.
ஸ்மார்ட்போன் டீல் : OnePlus 13, 13s, மற்றும் 13R உள்ளிட்ட பல மாடல்களை விளம்பரப்படுத்துகிறது. iQOO-வின் 13 சீரிஸ் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo V60 ஆகியவை சிறப்புக் குறிப்புகளில் அடங்கும். பட்ஜெட் விலையில்
இதையும் படிங்க :Amazon Great Indian Festival Sale: தேதி மற்றும் சிறந்த ஆஃபர்கள் அறிவிப்பு!
Samsung Galaxy S24-ஐ ரூ.40,000-க்கும் குறைவாகவும், Galaxy S24 FE-ஐ ரூ.35,000-க்கும் குறைவாகவும் வாங்கும் வசதி உள்ளது. மேலும், iPhone 16 ரூ.50,000-க்கும் குறைவாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த செயலியில் உள்ள டீஸர், iPhone 16 series மற்றும் Samsung Galaxy S24 போன்ற புதிய ஃபிளாக்ஷிப் மாடல்களில் பெரிய தள்ளுபடிகளை சுட்டிக்காட்டுகிறது . Motorola Edge 60 Pro- வும் மிகப்பெரிய தள்ளுபடியைப் பெறலாம். இதை தவிர பல மிட் ரேன்ஜ் போன் மட்டுல்லாமல் புதிய அறிமுகமனபோங்கள் என பல அடங்கும்
மற்ற பொருட்கள் Samsung Galaxy Book 4 போன்ற லேப்டாப்கள் ரூ.40,000க்கும் குறைவாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. OnePlus Buds 3 க்கும் தள்ளுபடி கிடைக்கும். ஸ்மார்ட்போன்கள் மற்றும் TWS இயர்பட்களைத் தவிர, கஸ்டமர்கள் Intel PCகள், 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் மற்றும் முன்-ஏற்றுதல் வாஷிங் மெஷின்கள் ஆகியவற்றிலும் கவர்ச்சிகரமான சலுகைகளைப் பெறலாம்.