பெண் இல்லாமல் குழந்தை பிறக்குது? அது எப்படி சாத்தியம்? முழுவதும் தெரிஞ்சிக்கொங்க!

Updated on 05-Sep-2025

AI டெக்க்நோலஜியில் புது புது கண்டுபிடிப்பு வரும் நிலையில் இப்பொழுது புது விதமாக ஒரு பெண் இல்லமல் தாய்மை அடைவது என்பது புதியதாக தான் இருக்கிறது ஆமாங்க சீனா இதற்கு முன்பு யாரும் பார்த்திராத வேலையே பாத்து இருக்கு அதாவது ஒரு பெண் தான் ஒரு உயிரின் கருவை சுமக்க முடியும் ஆனால் இங்கோ மனித உருவ ரோபோ ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் உதவியால் ஒரு உயிரின் கருவை சுமக்கிறது இந்த வேலையானது சீனாவில் உள்ள கைவா தொழில்நுட்பத்தில் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது இதை உருவாக்க காரணம் என்ன மற்றும் இந்த pregnancy ரோபோட் எப்படி செயல்படும் என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.

அது எப்படி வேலை செய்யும்.

குவாங்சோவில் உள்ள கைவா டெக்னாலஜியில் இந்தப் வேலை நடைபெற்று வருகிறது. பெய்ஜிங்கில் நடந்த உலக ரோபோ மாநாட்டில், திட்டத் தலைவர் டாக்டர் ஜாங் கிஃபெங், அறிவியல் ஏற்கனவே உள்ளது என்று அறிவித்தார். அடுத்த கட்டமாக, அதை ஒரு ரோபோவின் உடலுக்குள் வைப்பதாக அவர் கூறினார், இதனால் “ஒரு உண்மையான நபரும் ரோபோவும் கர்ப்பத்தை அடைய தொடர்பு கொள்ளலாம், இதனால் கரு உள்ளே வளர முடியும்.”

நாம் வாடகை தாய் மற்றும் டெஸ்ட்யூப் பேபி போன்றவற்றை எல்லாம் கேள்வி பட்டு இருப்போம் ஆனால் இது புது விதமாக ரோபோ மெஷின் குழந்தை சுமக்க முடியும் கருப்பை என்பது சைன்ஸ் பிக்ஷன் அல்ல. இது கருப்பையைப் பிரதிபலிக்கும் ஒரு மெஷின் , ஆர்டிபிசியல் அம்னோடிக் ப்ளூட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை வழங்க தொப்புள் கொடியாகச் செயல்படும் ஒரு குழாய் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில், அமெரிக்க விஞ்ஞானிகள் இதேபோன்ற “பயோபேக்குகளில்” முன்கூட்டியே பிறந்த ஆட்டுக்குட்டிகளை வாரக்கணக்கில் உயிருடன் வைத்திருக்க முடிந்தது.

இந்த கண்டுபிடிப்பின் நோக்கம் என்ன ?

இது ஒரு வித்தியாசமான பிறப்பு லட்சியமாக இருக்கிறது அதாவது ஒரு வாடகை தாய் மூலம் குழந்தை பிறப்பு போய் ஒரு ரோபோ கருவை சுமந்து செல்ல டாக்டர் ஜாங்கின் குழு விரும்புகிறது. அதாவது ஒரு வாடகை தாய் சாதரணமாக இதை செய்வதில்லை இதற்காக பல மடங்கு பணமும் கொடுக்கிறோம் எனவே இதை சுமார் 100,000 யுவான் (£11,000) விலையை நிர்ணயிக்கிறார்கள்.

அதாவது சீனாவில் இருந்து உருவெடுத்தது தான் இந்த IVF டேக்நோலாஜி இது 2007ஆம் ஆண்டு ஆரம்பித்து 2௦20 வரை 18% ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த ஆர்டிபிசியல் IVF சிகிச்சை முயற்சி தோர்த்து போகிறது எனவே ஒரு மனித தாய் மூலம் கொண்டு வரும்போது பல உடல் ரீதியாக பல பிரச்சனை இருக்கலாம் எனவே ஒரு ரோபோ மெஷின் தொழில்நுட்பம் மூலம் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது பலரால் ஆதரிக்கப்படுகிறது.

இதை பலர் எதிர்ப்பது ஏன் ?

  • தாய்மை என்ற உறவு கடவுளுக்கு நிகரானது அப்படிபட்ட உறவு குழந்தைக்கும் தாய்க்குமான பிணைப்பை பாதிக்கும் என்கிறார்
  • ஒரு தாய் குழந்தைக்கான பாச பிணைப்பை இருக்காது ஒரு மெஷினால் உருவானது என்ற அலட்சியம் உருவாகும் என்கிறார்.
  • மேலும் ஒரு ரோபோ மூலம் உருவாகும் குழந்தைக்கு பெற்றோர் யார் ரோபாவால் பிறக்கும் எப்படி இருக்கும் என பல கேள்வி எழுகிறது.
  • கருமுட்டை யாரிடம் இருந்து பெறப்படும்? முட்டைகள், விந்து அல்லது கருப்பை மெஷினில் கறுப்புச் சந்தையை எவ்வாறு நிறுத்துவது?” போன்ற சட்டப்பூர்வ கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
  • மனிதர்களின் சட்டங்களையும் இயற்கையின் விதிகளையும் மீறி வேகமாக வளருகிறது அறிவியல் என்கிறார்கள்
  • மெஷினின் மூலம் பிறக்கப்படும் குழைந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி எப்படி இருக்கும் பாச பிணைப்பு என கேள்வி எழும்புகிறது
  • மறுபுறம் 2026க்குள் முதல் குழந்தை ரோபோவிடமிருந்து பிறப்பதை காண ஆவலாக தயாராகி வருகிறது தொழில்நுட்ப உலகம்!

இதையும் படிங்க:PF பணம் UMANG ஆப் யில் எப்படி செக் செய்வது அனைத்தும் ஒரே இடத்தில் பார்க்கலாம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :