மாமன் OTT கலக்க ரெடி இந்த தேதியில் ரிலிஸ் இந்த பாசத்தை பார்த்தல் கண்ணில் கண்ணிரே வரும்

Updated on 29-Jul-2025

சூரி நடிப்பில் வெளியான மாமன் திரைப்படம் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் இயக்கத்தில் மே 16,2025 தியேட்டரில் வெளியானது மேலும் இப்படம் மக்கள் மனதில் மிக பெரிய இடத்தை பிடித்த மிக சிறந்த குடும்ப திரைப்படமாகும் தாய் மாமன் உறவை பற்றி அழகான அக்கா, தமபிக்கு இடையிலான பாச பிணைப்பை கொண்டுள்ளது மேலும் இப்பொழுது இதன் OTT தகவல் வெளியாகியுள்ளது

மாமன் OTT வெளியிடு எப்போ?

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் குடும்ப என்டர்டைன்மென்ட் திரைப்படமான ‘மாமன்’ ஆகஸ்ட் 8, 2025 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியராக வெளியாகவுள்ளதை அறிவித்துள்ளது. உணர்ச்சிப்பூர்வமான கதை மற்றும் அற்புதமான நடிப்பு என பார்வையாளர்களைக் கவர்ந்த இந்தத் திரைப்படம், டிஜிட்டல் ப்ரீமியர் மூலம், உலகம் முழுக்க உள்ள பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் தமிழ் ஸ்ட்ரீமிங்கில் கிடைக்கும்.

இப்படத்தில் சூரி முக்கிய கதாப்பாத்திரத்தில் மற்றும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா, ராஜ்கிரண், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மேலும் இப்படம் தாய் மாமன் பாசத்தையும் இதை தவிர ஒரு அக்கா, தம்பி பாசம் போன்றவற்றை மக்கள் மனதில் மிக பெரிய இடம் பிடித்துள்ளது கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு பிறகு இந்த படம் OTT யில் வெளியிடப்படுகிறது.

இதையும் படிங்க :Karuppu Teaser:பிறந்தநாள் சூப்பர் கிப்ட் சூர்யாவின் பட்டய கிலப்பும் கருப்பு டீசர் ரிலிஸ்

மாமன் தியேட்டர் வசூல் சாதனை

இந்த திரைப்படம் ரூ.40 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. நடிகர் சூரியின் நடிப்பில் வெளியான இப்படம், குடும்ப உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ளது மற்றும் நல்ல வரவேற்பைப் பெற்றது மேலும் OTT யிலும் மிக பெரிய வெற்றியை பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மாமன் கதை

மாமன் திரைப்படம் ஒரு மாமனும், அவன் அக்கா மகனும் இடையிலான உறவைக் குறித்து பேசுகிறது. அவர்களுக்குள் உள்ள அன்பு, அரவணைப்பு, மனவருத்தங்கள், புரிதல் இல்லாமை மற்றும் அந்த உறவை சோதிக்கும் நிகழ்வுகள் படம் முழுவதும் காட்டப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :