National Film Awards 2025:தமிழில் யார் வின்னர் விருதுகலில் வென்றவர் யார் யார்

Updated on 02-Aug-2025

National Film Awards 2025:தேசிய திரைப்பட விருதுகள் இந்திய சினிமாவில் மிகவும் மதிப்புமிக்க கௌரவங்களில் ஒன்றாகும். திரைப்படத் தயாரிப்பில் சிறந்து விளங்கும் திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் பல்வேறு மொழிகள் மற்றும் வகைகளில் சிறந்த திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் தொழில்நுட்ப சாதனைகளை அங்கீகரிக்கின்றன.

முந்தைய ஆண்டின் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் (CBFC) சான்றளிக்கப்பட்ட அடிபடையில் வழங்கப்படுகிறது அந்த வகையில் இந்திய ஜனாதிபதியால் வழங்கப்படுகின்றன. தேசிய திரைப்பட விருதை வெல்வது திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் இருவருக்குமே ஒரு சிறந்த சாதனையாகக் கருதப்படுகிறது.

இந்த லிஸ்ட்டில் தமிழ் உட்பட பல திரைப்படங்கள் இருக்கிறது, சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் பல போன்ற சிறந்த விருதுகள் உட்பட, 2025 தேசிய திரைப்பட விருதுகள் வென்றவர்களின் முழுப் லிஸ்ட்டை பார்ப்போம்.

இதையும் படிங்க: BSNL ஒரு முறை ரீச்சார்ஜ் பல நாள் நோ டென்ஷன் 6-1 வருடம் வேலிடிட்டி பெஸ்ட் திட்டம்

2025 தேசிய திரைப்பட விருதுகள் பெற்ற படம் மற்றும் வென்றவர்களின் லிஸ்ட்

  1. பார்கிங்:- இந்த லிஸ்ட்டில் வரும் முதல் படம் பார்கிங் இந்த திரைப்படம் 3 விருதுகளை அள்ளியுள்ளது.சிறந்த தமிழ்த் திரைப்படம், சிறந்த துணை நடிகர் (எம்.எஸ்.பாஸ்கர்), சிறந்த திரைக்கதை (ராம்குமார் பாலகிருஷ்ணன்) உள்ளிட்ட விருதுகளை ‘பார்க்கிங்’ படம் பெற்றுள்ளது.
  2. ஜவான்-இப்படத்தின் இயக்குனர் அட்லி ஆகும் இதில் சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக்கான் பெற்றுள்ளார்
  3. 12th பெயில்:- மூன்றாவதாக இப்படத்தில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றவர் விக்ராந்த் மஸ்ஸே ஆவார்.
  4. சாட்டர்ஜி vs நார்வே:- இப்படம் ஆஷிமா சிப்பர் இயக்கத்தில் வெளிவந்தது இதில் சிறந்த நடிகைக்கான விருது ராணி முகர்ஜிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  5. வாத்தி:- சிறந்த சிறந்த இசையமைப்பாளர் விருது ’வாத்தி’ படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
  6. உள்ளொழுக்கு:-சிறந்த துணை நடிகை விருது, ’உள்ளொழுக்கு ’ படத்திற்காக நடிகை ஊர்வசிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  7. சிறந்த தெலுங்கு திரைப்படமாக, பாலையா நடித்த ’பகவந்த் கேசரி’
  8. சிறந்த ஒடியா திரைப்படமாக ’புஷ்கரா
  9. சிறந்த மராத்தி திரைப்படமாக ’ஷாய்சி ஆய்
  10. சிறந்த மலையாளத் திரைப்படமாக ’உள்ளொழுக்கு
  11. சிறந்த கன்னட திரைப்படமாக ’கண்டீலு
  12. சிறந்த இந்தி திரைப்படமாக, ‘கட்ஹல்
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :