Valentines Day 2025: WhatsApp யில் ஸ்டிக்கர்,Gif ஸ்டேட்டஸ் எப்படியெல்லாம் வைத்து இம்ப்ரஸ் பண்ணுங்க

Updated on 14-Feb-2025

Valentines Day 2025: ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தை பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது இந்த காதலர் தினத்தை சிறப்பிக்கும் விதமாக தன் காதலன் மற்றும் காதலிக்கு வித, விதமாக எப்படியெல்லாம் வாழ்த்து சொல்லி அசத்த நினைப்பவர்களுக்காக இந்த வாழ்த்துக்கள் சொல்லி அசத்துங்க.

இந்த காதலர் தினம் காதலர் மற்றும் காதலிக்கு மட்டும் இல்லாமல் கணவன்-மனைவி சகோதர-சகோதரி, நண்பர்கள், அப்பா-மகள், அம்மா-மகன் போன்றவர்களுக்கும் இது போன்ற வாழ்த்துக்கள் சொல்லி அசத்தலாம் அந்த வகையில் இன்று WhatsApp யில் ஸ்டிக்கர்,Gif ஸ்டேட்டஸ் போன்றவற்றை எப்படியெல்லாம் சொல்லி அசத்தலாம் என்பதை பார்க்கலாம் வாங்க

valentine day

Valentines Day 2025: (காதல்-காதலிக்கு ) காதலர் தின டாப் 5 வாழ்த்துக்கள்.

ஓரெழுத்து கவிதை நீ…
ஈரெழுத்து கவிதை நாம்…
மூன்றெழுத்து கவிதை காதல்…
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

என் கவலைகளுக்கு நீ
மருந்தாகின்றாய் உன்
கவலைகளை மறைத்து
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் இதயமே…

குடைக்குள்
இரு இதயங்கள்
நனைகிறது
காதல் மழையில்
காதலர் தின வாழ்த்துக்கள்…

உறங்காத என் கண்களும் உறங்கிப் போனதடி உன் நெஞ்சமெனும் பஞ்சணையில்
அன்பான இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்!!

WhatsApp யில் காதலர் தின ஸ்டிக்கர்களை எப்படி அனுப்புவது

  1. கூகுள் ப்ளே ஸ்டோரை திறந்து “valentine day stickers for WhatsApp” என்று தேடவும்.
  2. விருப்பங்களில் இருந்து உங்களுக்கு விருப்பமான ஸ்டிக்கர் பேக்கைத் தேர்ந்தெடுத்து அதை WhatsApp யில் சேர்க்கவும்.
  3. டவுன்லோட் செய்த பிறகு, வாட்ஸ்அப்பில் உள்ள My Stickers டேபிள் ஸ்டிக்கர்களைக் கண்டறியவும்.
  4. பேக்கிலிருந்து ஒரு ஸ்டிக்கரைத் தேர்ந்தெடுத்து, ‘+’ (ADD) பட்டனை தட்டவும். ‘வாட்ஸ்அப்பில் சேர்’ என்பதைத் தட்டுவதன் மூலம் உறுதிப்படுத்தவும்.
  5. இப்போது, ​​உங்கள் அன்பான காதலன், காதலி, கணவன்-மனைவி, அம்மா பிள்ளைகள் போன்ற பல ஸ்டிக்கர்களை தேர்ந்தெடுத்து அனுப்பலாம்.

Valentines Day 2025 GIF whatsApp யில் எப்படி அனுப்புவது?

  1. வாட்ஸ்அப்பைத் திறந்து, நீங்கள் GIF ஐப் ஷேர் செய்ய விரும்பும் சேட்டுக்கு செல்லவும்.
  2. மெசேஜ் பாக்ஸில் உள்ள ஸ்மைலி ஐகானைத் தட்டவும்.
  3. GIF விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. சர்ச் ஐகானைக் கிளிக் செய்து “Valentines Day 2025 ” என டைப் செய்யவும்.
  5. இப்பொழுது நீங்கள் அனுப்ப விரும்பும் அன்பானவர்களுக்கு வாழ்த்து அனுப்பலாம்.

WhatsApp மாட்டு பொங்கல் status எப்படி டவுன்லோட் செய்து வைப்பது

  • வெப்சைட்டை சர்ச் செய்யுங்கள் : இலவசமாக டவுன்லோட் செய்யக்கூடிய மீடியாவை வழங்கும் வெப்சைட்டை கண்டறிய சர்ச் இஞ்சின் பயன்படுத்தவும். எங்கள் கருத்துப்படி, Pinterest போன்ற வெப்சைட்கள் அல்லது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களுக்கு சிறந்ததாக இருக்கும்.
  • காதலர்கள் செக்சனை கண்டறியவும்: காதலர் டெடிகேட்டட் செக்சன் அல்லது பிரிவைக் கண்டறியவும். இந்த தளங்கள் பொதுவாக சந்தர்ப்பத்தின் அடிப்படையில் கன்டென்ட் கிடைக்கும்.
  • போட்டோ அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்: இங்கே கிடைக்கும் விருப்பங்களைப் பார்த்து, நீங்கள் விரும்பும் போட்டோ அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்.
  • மீடியா டவுன்லோட் : அந்த பைலை சேமிக்க டவுன்லோட் பட்டனை கிளிக் செய்யவும். அதன் பார்மெட் WhatsApp உடன் இணைக்க உதவும் என்பதை நினைவில் கொள்ளவும்.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :