Moto G31 இந்தியாவில் 12,999ரூபாயின் விலையில் அறிமுகம்.

Updated on 29-Nov-2021
HIGHLIGHTS

மோட்டோரோலா இந்தியா தனது புதிய ஸ்மார்ட்போனான மோட்டோ ஜி31ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது

Moto G31 இல் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது

Moto G31 போனில் 50 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது

மோட்டோரோலா இந்தியா தனது புதிய ஸ்மார்ட்போனான மோட்டோ ஜி31ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. Moto G31 ஆனது MediaTek செயலியுடன் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. Moto G31 இல் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, போனில் 50 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் இரண்டு வண்ண வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Moto G31 விலை, விற்பனை தேதி:

இந்தியாவில் Moto G31 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,999 முதல் தொடங்குகிறது. புதிதாக அறிவிக்கப்பட்ட இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் 4ஜிபி+64ஜிபி மற்றும் 6ஜிபி+128ஜிபி என்கிற இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் வருகிறது.

பேஸிக் 4ஜிபி+64ஜிபி மாடல் ரூ.12,999 க்கும், 6ஜிபி+128ஜிபி மாடல் ரூ.14,999 க்கும் வருகிற டிசம்பர் ஆம் தேதி 6 முதல் Flipkart வழியாக வாங்குவதற்கு கிடைக்கும்.

Moto G31 சிறப்பம்சம்

மோட்டோரோலாவின் இந்த புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆனது AMOLED டிஸ்ப்ளே, ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 5,000mAh பேட்டரியுடன் வருகிறது.

– 6.4-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே
– 60Hz ரெஃப்ரெஷ் ரேட்
– 700 nits வரை பீக் ப்ரைட்னஸ்
– பஞ்ச்-ஹோல் கட்அவுட் வடிவமைப்பு
– 88.8 சதவீத ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ
– மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட்
– 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ்
– மைக்ரோ எஸ்டி கார்டைப் பயன்படுத்தி 1 டிபி வரை விரிவாக்கலாம்
– 5,000mAh பேட்டரி
– 20W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
– ஐபிஎக்ஸ்2 ஸ்பிளாஸ் ரெசிஸ்டிவிட்டி
– ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் (ஸ்டாக் எடிஷன்)
– குவாட் ரியர் கேமரா அமைப்பு
– 50MP மெயின் கேமரா
– 8MP அல்ட்ரா-வைட் கேமரா
– 2MP மேக்ரோ கேமரா
– 13MP செல்பீ கேமரா
– 3.5mm ஹெட்ஃபோன் ஜாக்
– கூகுள் அசிஸ்டண்ட்டிற்கான பிரத்யேக பட்டன்
– பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி VoLTE
– வைஃபை 802.11 ac (2.4GHz + 5GHz)
– ப்ளூடூத் 5.0
– ஜிபிஎஸ்
– க்ளோனாஸ்
– யூஎஸ்பி டைப்-சி.

மேலும் Moto G31 ஸ்மார்ட்போன் Redmi Note 10, Samsung Galaxy M21 மற்றும் Realme 8i போன்றவற்றுக்கு எதிராக கடுமையாக போட்டியிடலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :