சாம்சங் கேலக்ஸி எம்62 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவின் பிஐஎஸ் சான்று பெற்று இருக்கிறது. புது சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் SM-M626B/DS எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. பிஐஎஸ் சான்று பெற்று இருப்பதால், புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம் பிஐஎஸ் தளத்தில் இடம்பெற்று இருக்கும் SM-M626B/DS மாடல் நம்பர் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. இதன் 4ஜி வெர்ஷன் SM-M625 எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது. முந்தைய கேலக்ஸி ஏ32 4ஜி வேரியண்ட் SM-A325 எனும் மாடல் நம்பரும், 5ஜி வேரியண்ட் SM-A326 எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது.
கேலக்ஸி எம்62 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி மாத வாக்கில் அறிமகம் செய்யப்பட்ட கேலக்ஸி எப்62 மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. கேலக்ஸி எப்62 மாடலில் 7000 எம்ஏஹெச் பேட்டரி, 64 எம்பி குவாட் கேமரா, sAMOLED டிஸ்ப்ளே உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
MySmartPrice இன் அறிக்கையின்படி, சாம்சங் கேலக்ஸி M62 5G ஆனது BIS இணையதளத்தில் மாதிரி எண் SM-M626B / DS உடன் பட்டியலிடப்பட்டுள்ளது. சமீபத்தில், எஸ்.எம்-எம் 626 பி மாதிரி எண்ணைக் கொண்ட தொலைபேசியும் புளூடூத் எஸ்.ஐ.ஜி இணையதளத்தில் காணப்பட்டது. சாம்சங் கேலக்ஸி எம் 62 இன் 4 ஜி மாடல் சமீபத்தில் தாய்லாந்தின் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் விரைவில் இது இந்தியாவில் புதிய பெயராக அறிமுகப்படுத்தப்பட்டது, அதாவது சாம்சங் கேலக்ஸி எஃப் 62.
ஸ்மார்ட்போன் 6.7 அங்குல FHD + sAMOLED + Infinity-O டிஸ்ப்ளேவைப் வழங்குகிறது. சாதனத்தின் பெரிய டிஸ்பிளே உள்ளடக்கம் பார்க்க அல்லது கேமிங்கிற்கான சிறந்த வழி. டிஸ்ப்ளேவின் வலதுபுறத்தில் ஒரு சிறிய பஞ்ச்-ஹோல் கட்-அவுட் உள்ளது, இது முன் கேமராவைக் கொண்டுள்ளது. டிஸ்பிலேவுக்கு 110% NTSC வண்ண லிமிட் மற்றும் 420 நிட்ஸின் பிரகாசம் வழங்கப்படுகிற
சாம்சங் கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 9825 4ஜி பிராசஸர் கொண்டிருந்ததால், கேலக்ஸி எம்62 5ஜி ஸ்மார்ட்போன் வேறு பிராசஸர் அல்லது இதே பிராசஸருடன் கூடுதலாக எக்சைனோஸ் 5100 மோடெம் கொண்டிருக்கும் என தெரிகிறது.