சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போனை ஏப்ரல் 28 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் முதல் பட்ஜெட் ரக 5ஜி ஸ்மார்ட்போன் இது ஆகும். முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் கொண்டிருக்கும் என சாம்சங் அறிவித்து இருந்தது.
தற்போதைய தகவல்களின்படி கேலக்ஸி எம்42 5ஜி மாடலில் குவாட் கேமரா சென்சார்கள், இன்பினிட்டி யு ஸ்கிரீன், நாக்ஸ் செக்யூரிட்டி, குவிக் ஸ்விட்ச், சாம்சங் பே போன்ற அம்சங்கள் வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது. இது கடந்த ஆண்டு அறிமுகமான கேலக்ஸி ஏ42 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
இந்த ஸ்மார்ட்போன் 64 எம்பி பிரைமரி கேமரா, 6000 எம்ஏஹெச் பேட்டரி, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் என இரு வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 20 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.
சாம்சங் கேலக்ஸி எம் 42 5 ஜி ஸ்னாப்டிராகன் 750 ஜி சோசி மூலம் இயக்கப்படும் என்பதையும், சாம்சங் நாக்ஸ் பாதுகாப்பு மற்றும் சாம்சங் பே ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்பதையும் அமேசான் இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. சாம்சங் நாக்ஸ் என்பது ஸ்மார்ட்போன்களுக்கான பல அடுக்கு பாதுகாப்பு தீர்வாகும், இது தீம்பொருள் மற்றும் தீங்கிழைக்கும் அச்சுறுத்தல்களிலிருந்து மிகவும் முக்கியமான தகவல்களைப் பாதுகாக்கிறது. சாம்சங் பே ஒருங்கிணைந்த நிலையில், தொலைபேசி என்எப்சியை ஆதரிக்க வாய்ப்புள்ளது