Samsung தனது Galaxy M12 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் உயர் புதுப்பிப்பு வீத டிஸ்பிளே , குவாட் கேமரா அமைப்பு மற்றும் அதிக பேட்டரியுடன் வருகிறது. சாம்சங்கின் புதிய போனின் விலை மற்றும் சிறப்பம்சத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க….
சாம்சங் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி +64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 13,499 ஆகும். இதன் விற்பனை மார்ச் 18 ஆம் தேதி துவங்குகிறது.
– 6.5 இன்ச் 720×1600 பிக்சல் HD+ இன்பினிட்டி வி டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ்
– எக்சைனோஸ் 850 ஆக்டாகோர் பிராசஸர்
– மாலி-G52
– 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
– 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3.1
– 48 எம்பி பிரைமரி கேமரா, f/2.0
– 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
– 5 எம்பி டெப்த் கேமரா
– 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
– 8 எம்பி செல்பி கேமரா, f/2.2
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 6,000 எம்ஏஹெச் பேட்டரி
– 15 வாட் பாஸ்ட் சார்ஜிங்
புதுய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, ஆக்டாகோர் எக்சைனோஸ் 850 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3.1 வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி குவாட் கேமராக்கள், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 6000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 15 வாட் அடாப்டிவ் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது