சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எப்02எஸ் மற்றும் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன்களை ஏப்ரல் 5 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது. இரு ஸ்மார்ட்போன்களும் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கின்றன..
ப்ளிப்கார்ட் தளத்தில் கேலக்ஸி எப்02எஸ் மற்றும் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன்களின் சில அம்சங்கள் பிரத்யேக வலைப்பக்கத்தில் விவரிக்கப்பட்டு உள்ளன. அதன்படி இரு மாடல்களும் வாட்டர்-டிராப் ரக நாட்ச் கொண்டிருக்கிறது. இத்துடன் கேலக்ஸி எப்1 இரு ஸ்மார்ட்போன்களில் உயர்ந்த மாடலாக இருக்கும் என தெரிகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எப்02எஸ் மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், மூன்று பிரைமரி கேமராக்கள், 13 எம்பி பிரைமரி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.
கேலக்ஸி எப்12 மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, குவாட் கேமரா சென்சார்கள், யுஎஸ்பி டைப் சி போர்ட், எக்சைனோஸ் 850 பிராசஸர், 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எஃப் 02 எஸ் மற்றும் எஃப் 12 ஏப்ரல் 5 ஆம் தேதி சாம்சங் கேலக்ஸி எஃப் 02 எஸ் மற்றும் எஃப் 12 ஆகியவற்றின் மதிப்பிடப்பட்ட விலையில் அறிமுகப்படுத்தப்படும். ஃபோன்களின் விலை ரூ .10,000 க்கு கீழ் மற்றும் பிளிப்கார்ட்டில் விற்கப்படும்