Jio வின் ரூ.152 டேட்டா ஆட் ஆன் பேக் தினமும் 2 ஜிபி டேட்டாவை வழங்கும்
Jio மாதத்திற்கு 56 ஜிபி அளவிலான அதிவேக 4ஜி டேட்டாவை வழங்குகிறது
மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்
தற்போது நாடு முழுவதும் உள்ள ஜியோ போன் வாடிக்கையாளர்கள் ரூ.152 ப்ரீபெய்ட் டேட்டா ஆட்-ஆன் பேக் ரீசார்ஜ் செய்யலாம். இது மாதத்திற்கு 56 ஜிபி அளவிலான அதிவேக 4ஜி டேட்டாவை வழங்குகிறது. இதன் பொருள் என்னவென்றால், இது எந்த விதமான வொய்ஸ் காலிங் நன்மைகளையும் வழங்காது. அதற்கு பதிலாக, தினசரி டேட்டா போதுமானதாக இல்லாத பயனர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
ரூ.152 ப்ரீபெய்ட் பேக் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது மற்றும் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது, ஆக இதன் வேலிடிட்டி முழு காலத்திற்கும் மொத்தமாக 56 ஜிபி டேட்டாவை வழங்கும். மேலும் இந்த ரீசார்ஜ் JioCinema, JioTV, JioCloud போன்ற Jio ஆப்களின் பேக்கை வழங்காது.. அதாவது வாய்ஸ் கால் மற்றும் ஆப்களுக்கான அணுகலை வழங்கும் ஆக்டிவ் திட்டம் ஏற்கனவே உங்களிடம் இருந்தால், ரூ.152 ஆனது ஒரு டேட்டா ஆட்-ஆன் ஆகவே மட்டுமே செயல்படும்.
ஜியோ போன் ரூ.152 நன்மைகள் என்ன
ஜியோ போன் ரூ.152 ரீசார்ஜ் பேக் ஆனது Jio.com, MyJio ஆப் மற்றும் மூன்றாம் தரப்பு ஆப்கள் வழியாக ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. குறிப்பிட்டுள்ளபடி, இந்த ரீசார்ஜ் பேக் 2ஜிபி அளவிலான அதிவேக டெய்லி டேட்டா மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டியாகும்
இது எந்த வொய்ஸ் கால் நன்மைகளுடன் வரவில்லை மற்றும் ஜியோ ஆப்களின் அணுகலையும் கூட பெறாது. எனவே, உங்கள் தினசரி டேட்டா வரம்பை நீட்டிக்க நீங்கள் விரும்பினால், ரூ.152 பேக் ஒரு நல்ல மாற்றாக இருக்கும். இருப்பினும், இந்த டேட்டா பேக்கைப் பயன்படுத்த உங்களுக்கு ஜியோ போன் தேவைப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ..
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.