5ஜி நெட்வொர்க் பற்றி ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது
ஸ்பெக்ட்ரம் மற்றும் உரிமங்களை மத்திய அரசு வியாழக்கிழமை வழங்கியுள்ளது.
5ஜி ஸ்பெக்ட்ரம்ஏலம் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறலாம்
நாட்டில் நீண்ட நாட்களாக காத்திருக்கும் 5ஜி நெட்வொர்க் பற்றி ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. 5ஜி சோதனைகளுக்காக இரண்டு பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் மற்றும் உரிமங்களை மத்திய அரசு வியாழக்கிழமை வழங்கியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் மற்றும் வோடபோன்-ஐடியா லிமிடெட் நிறுவனங்களுக்கு 5ஜி நெட்வொர்க்குகளை சோதனை செய்ய மத்திய அரசு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கியுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் குஜராத்தில் 5ஜி நெட்வொர்க்குகளை சோதனை செய்ய ஸ்பெக்ட்ரம் மற்றும் உரிமங்கள் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளன.
5ஜி ஸ்பெக்ட்ரம்ஏலம் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறலாம்
5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) துரிதமாக செயல்பட்டு வருவதாக தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த காலங்களில் தெரிவித்திருந்தார். பிப்ரவரி நடுப்பகுதியில் டிராய் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வாய்ப்புள்ளது. விரைவில், ஏலத்தை துவங்குவோம்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.