ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாகும். ஜியோ தனது பயனர்களுக்கு தொடர்ந்து புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. இருப்பினும், நிறுவனம் சில சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களையும் கொண்டுள்ளது.
இந்த திட்டங்கள் பயனர்களுக்கு பல வசதிகளுடன் OTT பயன்பாடுகளுக்கான அணுகலையும் வழங்குகின்றன. இந்த போஸ்ட்பெய்டு திட்டங்களின் விலை மிகவும் குறைவு என்பது கூடுதல் சிறப்பு. Netflix சந்தாவுடன் வரும் இந்தத் திட்டங்களின் விலை ரூ.1000க்கும் குறைவாகவே இருக்கும். Netflix, Disney+ Hotstar, Amazon Prime வீடியோவிற்கான இலவச சந்தாக்களுடன் வரும் திட்டங்களை குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
ரிலையன்ஸ் ஜியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவுடன் பல திட்டங்களைக் கொண்டுள்ளது. நிறுவனம் ரூ.399 விலையில் போஸ்ட்பெய்ட் திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டம் ஒரு மாதத்திற்கு 75GB டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் ஆகியவற்றின் ஒரு மாத சந்தா கிடைக்கிறது.
மேலும், அமேசான் பிரைம் வீடியோ ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது. இதில் அன்லிமிட்டட் காலிங் தினசரி 100 இலவச SMS ஆகியவையும் பயனர்களுக்கு கிடைக்கும். மேலும், ஜியோ டிவி , ஜியோ சினிமா (Jio Cinema), ஜியோ செக்யூரிட்டி, ஜியொ கிளவுட் (Jio Cloud) ஆகிய ஜியோ சேவைகளின் இலவச அணுகலும் பயனர்களுக்குக் கிடைக்கும்.
ஜியோவின் ரூ.599 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு 100GB டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்திலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் ஆகியவற்றின் ஒரு மாத சந்தா கிடைக்கிறது. 100GB டேட்டா ரோல்ஓவர் ஆஃபரும் இதில் உள்ளது.
மேலும், அமேசான் பிரைம் வீடியோ ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், குடும்ப உறுப்பினர்கள் ஒருவருடன் இந்த திட்டத்தை பகிர்ந்துகொள்ள முடியும். இதில் அன்லிமிட்டட் காலிங் , தினசரி 100 இலவச SMS ஆகியவையும் பயனர்களுக்கு கிடைக்கும். மேலும், ஜியோ டிவி , ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி, ஜியொ கிளவுட் ஆகிய ஜியோ சேவைகளின் அணுகலும் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஜியோ போஸ்ட்பெய்ட் ரூ.799 பேமிலி திட்டம்
ஜியோவின் ரூ.799 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் மாதத்திற்கு 150GB டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்திலும் நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் ஒரு மாத சந்தா கிடைக்கிறது. கூடுதலாக 200GB டேட்டா ரோல்ஓவர் ஆஃபரும் இதில் உள்ளது.
அமேசான் பிரைம் வீடியோ சந்தா ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கூடுதல் அம்சம் என்னவென்றால், குடும்ப உறுப்பினர்கள் ஒரண்டு பேருடன் இந்த திட்டத்தை பகிர்ந்துகொள்ள முடியும். இதில் வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 இலவச SMS ஆகியவையும் பயனர்களுக்கு கிடைக்கும். மேலும், ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ டிவி, ஜியொ கிளவுட் ஆகிய ஜியோ சேவைகளின் அணுகலும் பயனர்களுக்கு அளிக்கப்படுகிறது