Realme 8 5G இன்று முதல் விற்பனை. பிளிப்கார்ட் மற்றும் Realme.com நண்பகல் 12 மணிக்கு விற்பனை தொடங்கும். போன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வகைகளில் வருகிறது. போனில் 4 ஜிபி ரேம் வேரியண்டின் விலை ரூ .14,999. அதே நேரத்தில், அதன் 8 ஜிபி ரேம் வேரியண்டிற்கு நீங்கள் ரூ .16,999 யில் யில் வாங்கலாம் .
இன்றைய விற்பனையில், HDFC வங்கியின் கிரெடிட் கார்டில் இருந்து பணம் செலுத்தும்போது 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். இது தவிர, பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு பயனர்கள் 5 சதவீத அன்லிமிட்டட் கேஷ்பேக்கின் பயனைப் பெறுவார்கள். எக்ஸ்சேஞ்ச் சலுகையில் போனை வாங்கி கொண்டால் ரூ .15,650 வரை பயனடையலாம்.
ரியல்மி 8 5ஜி 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 16 எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யுஐ 2.0 வழங்கப்பட்டு இருக்கிறது
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி பிளாக் அன்ட் வைட் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது
டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் ரியல்மி 8 5ஜி 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ, 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது