போக்கோ இந்தியா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில், போக்கோவை போக்கோ மட்டும்தான் வெல்ல முடியும் எனும் தகவலை #PROformance எனும் ஹேஷ்டேக்குடன் பதிவிட்டு இருக்கிறது. மேலும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
முன்னதாக M2012K11AG எனும் மாடல் நம்பர் கொண்ட போக்கோ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியானது. அதில் புது ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் FHD+ 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர், 5200 எம்ஏஹெச் பேட்டரி, அதிகபட்சம் 8 ஜிபி + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்வது குறித்து நிறுவனம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை. போகோ எக்ஸ் 3 ப்ரோவின் கசிந்த விவரக்குறிப்புகள் இந்த வரவிருக்கும் போகோ மொபைல் போனை குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 ப்ரோசெசர் மூலம் வேகம் மற்றும் பல்பணி மூலம் இயக்க முடியும் என்பதையும், போனை இயக்குவதற்கு 5200 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுவதையும் குறிக்கிறது.
அந்த வகையில் புதிய போக்கோ எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் எக்ஸ் சீரிசுக்கு மாற்றாக இருக்கும் என போக்கோ தெரிவித்து உள்ளது. தற்போதைய தகவல்களின் படி போக்கோ எக்ஸ்3 ப்ரோ இந்திய சந்தையில் புது போக்கோ எப் சீரிஸ் மாடலாக அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஐரோப்பிய சந்தையில் இந்த மாடல் விலை 250 யூரோக்கள் ஆகும். இதே ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்