போக்கோவின் சமீபத்திய ஸ்மார்ட்போன் போக்கோ எக்ஸ் 3 ப்ரோ இன்று முதல் விற்பனையாகும். ரூ .18,999 ஆரம்ப விலையுடன் இந்த போனின் விற்பனை பிளிப்கார்ட்டில் நண்பகல் 12 மணி முதல் விற்பனை தொடங்கும். முதல் விற்பனையில், நிறுவனம் பல கவர்ச்சிகரமான சலுகைகளுடன் இந்த போனை வாங்குவதற்கான வாய்ப்பை வழங்க உள்ளது. ICICI வங்கியின் கிரெடிட் கார்டு மற்றும் ஈஎம்ஐ பரிவர்த்தனைகளில் பயனர்கள் 1 ஆயிரம் ரூபாய் உடனடி தள்ளுபடி கிடைக்கு..
இது தவிர, உங்களுக்கு பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுடன் ஷாப்பிங் செய்தால், உங்களுக்கு 5 சதவீதம் அன்லிமிட்டட் கேஷ்பேக் கிடைக்கும். எக்ஸ்சேஞ்ச் சலுகையில் போனை வாங்கி கொண்டால் 16,500 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம்.
– 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர்
– அட்ரினோ 640 GPU
– 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம்
– 128 ஜிபி (UFS 3.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 11 மற்றும் எம்ஐயுஐ 12
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
– 8 எம்பி 119° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
– 2 எம்பி டெப்த்
– 2 எம்பி மேக்ரோ சென்சார், 1.75μm, f/2.4
– 20 எம்பி செல்பி கேமரா, f/2.2
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
– ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP53)
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 5160 எம்ஏஹெச் பேட்டரி
– 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் புதிய ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 சார்ந்த எம்ஐயுஐ 12 கொண்டிருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி போர்டிரெயிட் லென்ஸ், 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் போக்கோ எக்ஸ்3 ப்ரோ 5160 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கிறது