நோக்கியா ஜி50 ஸ்மார்ட்போன் சமீபத்தில் சீன வலைதளத்தில் சான்று பெற்றது. இந்த நிலையில், இதே ஸ்மார்ட்போன் விவரங்கள் தற்போது கீக்பென்ச் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் சில விவரங்கள் இடம்பெற்றுள்ளது.
நோக்கியா பிராண்டட் மொபைல்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி குளோபல் நிறுவனம், நோக்கியா ஜி 50 5ஜி என்கிற ஒரு மிட் ரேன்ஜ் 5ஜி போனில் வேலை செய்கிறது என்கிற தகவலை பல அறிக்கைகள் வெளிப்படுத்திய வண்ணம் உள்ளன.
அந்த பட்டியலில் Winfuture.de இணைந்துள்ளது. இது குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் லீக் ரெண்டர்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகளை ஆன்லைனில் பகிர்ந்துள்ளது. ஆக இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக வெளியாக அதிக நேரம் எடுக்காது என்று தோன்றுகிறது.
கீக்பென்ச் விவரங்களின்படி நோக்கியா ஜி50 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. ஏரற்கனவே வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்பட்டது.
புதிய நோக்கியா ஜி50 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை 288 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 21,022 என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.82 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.
நோக்கியா ஜி 50 5ஜி ஸ்மார்ட்போன் 6.38 இன்ச் அளவிலான எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, இது 720 x 1560 பிக்சல்ஸ் எச்டி+ ரெசல்யூஷனை வழங்குகிறது.இது ஸ்னாப்டிராகன் 480 சிப்செட்டை பேக் செய்யும். மேலும் இது 4,850mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-ஐ ப்ரீஇன்ஸ்டால்டு செய்யும் இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் மெயின் கேமராவைக் கொண்டிருக்கும்.மற்ற சில அறிக்கைகள் இது 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் போன்ற வகைகளில் வரலாம் என்று தெரிவிக்கிறது.
நோக்கியா ஜி50 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்த செப்டம்பரில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படலாம் என்று ஊகங்கள் பரவி வருகின்றன.
லீக் ஆன நோக்கியா G50 5G ஸ்மார்ட்போனின் விளம்பரப் படங்கள், அது Midnight Sun மற்றும் Blue போன்ற வண்ணங்களில் வரும் என்பதை காட்டுகின்றன