விரைவில் நோக்கியா 3.4 இந்தியாவுக்குள் நுழைய உள்ளது. நிறுவனம் அதிகாரப்பூர்வமாக சாதனத்தை teas செய்துள்ளது. நோக்கியா 3.4 செப்டம்பர் 2020 இல் அறிமுகமானது, டிசம்பர் மாத இறுதியில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று வதந்திகள் பரவின. இருப்பினும் இது நடக்கவில்லை, இப்போது நோக்கியா 3.4 இந்தியாவில் வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
3.4 ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டு உள்ளது. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகமாகும் என கூறப்பட்டது.
நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் நோக்கியா 2.4 மாடலுடன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படாமல் இருந்தது. தற்சமயம் நோக்கியா 3.4 மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. எனினும், சரியான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.
சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் பன்ச் ஹோல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், 8 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது