Moto G100 அறிமுக தேதி வெளியானது இந்த அம்சத்துடன் என்ட்ரி ஆகும்.

Updated on 18-Mar-2021
HIGHLIGHTS

மோட்டோ ஜி100 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் மார்ச் 25ஆம் தேதி அறிமுகமாகும்

சீன சந்தையில் அறிமுகம் செய்த மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போனின் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது

மோட்டோரோலா எட்ஜ் எஸ் இன் ரீ ப்ராண்ட் பதிப்பாக இருக்கும் என்றும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

மோட்டோ ஜி100 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் மார்ச் 25ஆம் தேதி அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. தற்போது புது ஸ்மார்ட்போனின் டீசரை மோட்டோரோலா வெளியிட்டு இருக்கிறது

புதிய மோட்டோ ஜி100 அந்நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்த மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போனின் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. மோட்டோரோலா வெளியிட்டு இருக்கும் டீசர்களில் தேதியை குறித்து கொள்ளுங்கள் எனும் வாசகம் மற்றும் மார்ச் 25 மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த தேதியில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் அடுத்தடுத்த டீசர்களில் தெரியவரும்.

இது மோட்டோரோலா எட்ஜ் எஸ் இன் ரீ ப்ராண்ட் பதிப்பாக இருக்கும் என்றும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த போன் ஜனவரி மாதம் ஸ்னாப்டிராகன் 870 செயலியுடன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

MOTOROLA EDGE S SPECS

முந்தைய தகவல்களின் படி மோட்டோ ஜி100 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், கீழ்புறத்தில் ஸ்பீக்கர் கிரில் வழங்கப்படும் என கூறப்பட்டது. மேலும் இதில் குவாட் கேமரா சென்சார், டூயல் செல்பி கேமரா வழங்கப்படலாம்.

Motorola Edge Sமொபைல் போன் ஆண்ட்ராய்டு 11 இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது தவிர நீங்கள் MyUI ஐப் பெறுகிறீர்கள். தொலைபேசியில், நீங்கள் 6.7 அங்குல FHD + டிஸ்ப்ளேவைப் பெறுவீர்கள். இதில், நீங்கள் HDR10 இன் ஆதரவையும் பெறுகிறீர்கள். நாங்கள் முன்பு உங்களிடம் கூறியது போல, இந்த மொபைல் போன் உலகின் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 செயலியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் போனாக பார்க்கப்படுகிறது. இது தவிர, நீங்கள் 8 ஜிபி ரேம் வரை ஆதரவையும் வழங்குகிறது..

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :