Redmi Note 10 Pro இன்று முதல் விற்பனை 1000ருபாய் வரையிலான கேஸ்பேக் பெறலாம்.

Updated on 17-Mar-2021
HIGHLIGHTS

ரெட்மி நோட் 10 ப்ரோ இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மொபைல் போன் ஆகும்

சியோமி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இரு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களிலும் 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் AMOLED ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.அதனை தொடர்ந்து இதன் விற்பனை இன்று பகல் 12 மணிக்கு அமேசானில் விற்பனைக்கு  வருகிறது.

REDMI NOTE 10 PRO விலை  மற்றும் ஆபர் தகவல்.

ரெட்மி நோட் 10 ப்ரோ 6 ஜிபி+64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 15,999, 6ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16,999 மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 18,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ரெட்மி நோட் 10 ப்ரோ இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மொபைல் போன் ஆகும், இது இந்தியாவில் Xiaomi  தயாரித்துள்ளது, இது தவிர, ரெட்மி நோட் 10 ப்ரோ மொபைல் போன் விற்பனை  இன்று மதியம் 12:00 மணிக்கு அமேசான் இந்தியா மற்றும் சியோமியின் அதிகாரப்பூர்வ கமிங் ஆன்லைன் ஸ்டோர் அதாவது மீ.காம் மூலம் விற்பனைக்கு. இருப்பினும், இது தவிர, நீங்கள் மி ஹோம், மற்றும் மி ஸ்டுடியோ ஸ்டோர்களுக்கும் வரும்..
 
சில விற்பனை சலுகைகளைப் பற்றி நாம்  பேசினால், ஷியோமி ரெட்மி நோட் 10 ப்ரோ மொபைல் தொலைபேசியில், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் ஈ.எம்.ஐ பரிவர்த்தனை மூலம் 1000 ரூபாயின் உடனடி கேஷ்பேக்கையும் வழங்குகிறது. இருப்பினும், உங்களுக்கு  இந்த மொபைல் போனை மொபிக்விக் மூலம் வாங்கினால், உங்களுக்கு ரூ .5000 கேஷ்பேக் கிடைக்கும்.

REDMI NOTE 10 PRO சிறப்பம்சம்.

– 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 AMOLED ஸ்கிரீன்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர் 
– அட்ரினோ 618 GPU
– 6 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி (UFS 2.2) மெமரி 
– 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12
– டூயல் சிம் 
– ரெட்மி நோட் 10 ப்ரோ – 64 எம்பி பிரைமரி கேமரா, LED பிளாஷ்
– 8 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார்
– 2 எம்பி டெப்த் கேமரா
– 5 எம்பி டெலிமேக்ரோ கேமரா
– ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் – 108 எம்பி பிரைமரி கேமரா, 0.7μm, LED பிளாஷ்
– 8 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார் 
– 2 எம்பி டெப்த் கேமரா
– 5 எம்பி டெலிமேக்ரோ கேமரா
– 16 எம்பி செல்பி கேமரா
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
– வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP52)
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 5020 எம்ஏஹெச் பேட்டரி
– 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் வின்டேஜ் பிரான்ஸ், கிளேசியல் புளூ மற்றும் டார்க் நைட் நிறங்களில் கிடைக்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :