ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்காமல் போனது.
பயனர்கள் சிக்னல் குறைபாடு, இணைய சேவையில் இடையூறை சந்தித்தனர்.
ஜியோ சார்பில் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு இரண்டு நாட்களுக்கு அன்லிமிடெட் சலுகை வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்காமல் போனது. நெட்வொர்க் பிரச்சினை காரணமாக பயனர்கள் சிக்னல் குறைபாடு, இணைய சேவையில் இடையூறை சந்தித்தனர். ஜியோவின் நெட்வொர்க் பிரச்சினை மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் பரவலாக ஏற்பட்டது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் நெட்வொர்க் பிரச்சினையை சில மணி நேரங்களில் தங்களின் குழு சரிசெய்துவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது. நெட்வொர்க்கில் ஏற்பட்ட திடீர் கோளாறை ஈடுசெய்யும் வகையில், ஜியோ சார்பில் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு இரண்டு நாட்களுக்கு அன்லிமிடெட் சலுகை வழங்கப்படுகிறது.
இரண்டு நாள் அன்லிமிட்டட் சலுகை குறித்த விவரம் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு மெசேஜ் மூலம் தெரிவிக்கப்பட இருக்கிறது. இந்த சலுகை நள்ளிரவில் செயல்படுத்தப்படும். பயனர்களின் தற்போதைய சலுகை நிறைவுற்றதும், இரண்டு நாட்களுக்கான அன்லிமிட்டட் சலுகை வழங்கப்படும். இதன் காரணமாக 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையை, பயனர்கள் 30 நாட்கள் பயன்படுத்தலாம்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.