ரிலையன்ஸ் ஜியோவின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. 2021 டிசம்பரில், 1.29 கோடி வாடிக்கையாளர்கள் வெளியேறினர், இப்போது 2022 ஜனவரியிலும் ஜியோ மிகப்பெரிய இழப்பைச் சந்தித்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) புதிய அறிக்கையின்படி, 2022 ஜனவரியில் சுமார் ஒன்பது லட்சம் பேர் ஜியோவிடம் இருந்து விடைபெற்றுள்ளனர்.
இதன்படி ஜியோ நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 93.32 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. ஜியோ தனது செயல்படாத வாடிக்கையாளர்களை நீக்குவதால் அதிகப்படியான வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.
இத்துடன் வோடஃபோன் நிறுவனம் 3.89 லட்சம் வாடிக்கையாளர்களையும், பி.எஸ்.என்.எல் 3.77 லட்சம் வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளன.
இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஏர்டெல் மட்டும் புதிதாக 7.14 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை கடந்த ஜனவரி மாதம் பெற்றுள்ளது.
மேலும் கடந்த ஜனவரி மாதத்தில் 95.3 லட்சம் மொபைல் எண்கள் போர்ட் செய்யப்பட்டுள்ளது என்றும், இதில் 54.9 லட்சம் விண்ணப்பங்கள் ஜோன் 1-ல் இருந்தும், 40 லட்சம் விண்ணபங்கள் ஜோன் 2-ல் இருந்தும் வந்ததில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபைபர் பிராட்பேண்டை பொறுத்தவரையும் ஜியோ அதிகபட்சமான வாடிக்கையாளர்களை கடந்த ஜனவரி மாதம் பெற்றுள்ளது. ஏர்டெல், பிஎஸ்.என்.எல் ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
ஒயர்லைன் வாடிக்கையாளர்களை பொறுத்தவரை ஜியோ 3 லட்சம் புதிய ஒயர்லைன் சந்தாதாரர்களை பெற்றுள்ளது. ஏர்டெல் 94 ஆயிரம் சந்ததாதாரர்கள், பிஎஸ்என்எல் 32098 சந்ததாதாரர்கள், குவாட்ரண்ட் 16749 சந்தாதாரரக்ளை பெற்றுள்ளன. வோடஃபோன் நிறுவனமும் நிறைய ஒயர்லைன் சந்ததாரர்களை இழந்துள்ளது